
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுரை கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (ஜூன் 27) மோதவுள்ளன. முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுரை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ஹார்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் போன்ற வீரர்களைப் பற்றி மட்டுமே ஏன் பேச வேண்டும். அணியில் உள்ள அனைவருக்கும் அவரவர்களுக்கான பணிகள் இருக்கின்றன. வீரர்களின் வேலை டி20 உலகக் கோப்பையை அணியாக இணைந்து வெல்வது.
ஒரு போட்டியில் வெற்றி பெறுவதற்கு யாரேனும் ஒருவர் அன்றைய நாளில் சிறப்பாக விளையாடினால் போதுமானது. ஆனால், ஒரு தொடரில் வெற்றி பெற வேண்டுமானால், அணியில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும்.
ஜஸ்பிரித் பும்ரா அல்லது அர்ஷ்தீப் சிங்கை மட்டும் நம்பி களமிறங்கினால், கண்டிப்பாக தோல்வியடைவோம். அனைவரும் ஒன்றிணைந்து அணியாக செயல்பட வேண்டும். இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். அவர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.