
டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் வென்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.
அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. விராட் கோலி முக்கியமான இந்தப் போட்டியிலும் 9 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.
இருப்பினும் ரோஹித் சர்மா நன்றாக விளையாடியதால் இந்திய அணி நல்ல ரன்களை குவிக்க முடிந்தது.
அக்ஷர் படேல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணி கடைசியாக தோனி தலைமையில் 2011, 2013இல் ஐசிசி கோப்பைகளை வென்றன. பிறகு இதுவரை எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை.
இதனால் இந்திய ரசிகர்கள் மிக ஆவலுடன் இருக்கிறார்கள். வெற்றிக்குப் பிறகு ரோஹித் ஓய்வறையில் அழுகும்போது விராட் கோலி தேற்றிய காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கோலி, ரோஹித் மிகச் சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள். இந்தப் படங்கள் இந்திய ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.