
டி20 உலகக் கோப்பையில் இந்திய வேகப் பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கு சாதனை படைக்க நல்ல வாய்ப்பு.
25 வயதான இடது கை வேகப் பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் மத்திய பிரதேசத்தில் பிறந்தவர். ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். ஸ்விங் செய்வதில் வல்லவர். டெத் ஓவரில் (போட்டியின் இறுதிக் கட்ட ஓவர்) சிறப்பாக பந்து வீசக்கூடியவர்.
இதுவரை நடந்த 7 போட்டிகளில் அர்ஷ்தீப் சிங் 15 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எக்கானமி 7.5ஆக இருக்கிறது.
இதற்கு முன்பாக இலங்கையின் வனிந்து ஹசரங்கா 15 விக்கெட்டுகள் எடுத்ததே ஒரு உலகக் கோப்பையில் வீரரின் அதிகபட்ச விக்கெட்டாக இருந்தது.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானின் வேகப் பந்து வீச்சாளர் பாசல்ஹக் பரூக்கி புதிய இலக்கை நிரணயித்துள்ளார். அதாவது 17 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார்.
அரையிறுதியில் தெ.ஆ. அணியிடம் தோற்று ஆப்கானிஸ்தான் வெளியேறியது.
இந்நிலையில் இறுதிப் போட்டியில் விளையாடும் அர்ஷ்தீப் இன்னும் 3 விக்கெட்டுகள் எடுத்தால் 18 விக்கெட்டுகள் உடன் புதிய உலக சாதனை படைக்க ஒரு வாய்ப்பிருக்கிறது.
ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியல்:
1. பாசல்ஹக் பரூக்கி -17 (2024)
2. வனிந்து ஹசரங்கா - 16 (2021-2022)
3. அர்ஷ்தீப் சிங் - 15 (2024)
4. அஜந்தா மெண்டிஸ் - 15 (2012-13)
5. ரஷித் கான் - 14 (2024)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.