
இந்திய அணியை விமர்சிப்பவர்களுக்கு டி20 உலகக் கோப்பையை வென்றதன் மூலம் இந்திய அணி பதிலளித்துள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆட்டத்தின் இறுதி ஓவரில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணிக்கு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய அணியை விமர்சிப்பவர்களுக்கு டி20 உலகக் கோப்பையை வென்றதன் மூலம் இந்திய அணி பதிலளித்துள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி அதன் அபார செயல்பாடுகளால் டி20 உலகக் கோப்பையை வென்று, அணியை விமர்சித்தவர்களை அமைதியாக்கியுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றுள்ளது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் இறுதிப்போட்டி வரை சென்று, கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
இந்திய அணியின் வெற்றி பலருக்கும் ஊக்கமளிக்கும். இந்திய அணியினர் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடி கோப்பையை வென்று இந்திய மக்கள் அனைவரையும் பெருமையடையச் செய்துள்ளனர். 140 கோடி மக்களின் கனவுகளை நனவாக்கியுள்ளனர் என்றார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.