உலகக் கோப்பையின் முதல் போட்டிக்கு முன்பாக இதைச் செய்ய வேண்டும்: ரோஹித் சர்மா

நியூயார்க்கில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டிகள் குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது...
பயிற்சியில் இந்திய வீரர்கள்.
பயிற்சியில் இந்திய வீரர்கள். படம்: எக்ஸ் / ரோஹித் சர்மா
Published on
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது.

முதல் கட்டமாக கேப்டன் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் உள்பட வீரர்கள் சிலரும் மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர். மற்ற வீரர்களும் அணியுடன் இணையத் தயாராகி வருகின்றனர்.

பயிற்சியில் இந்திய வீரர்கள்.
4ஆவது சுற்றில் ஹிகரு நகமுரா, கார்ல்சென், வைஷாலி அபாரம்: பிரக்ஞானந்தா பின்னடைவு!

உலகக் கோப்பைக்கு முன்பாக ரோஹித் சர்மா கூறியதாவது:

இதற்கு முன்பாக இங்கு விளையாடியதில்லை என்பதால் இதன் ஆடுகளத்தின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும். பயிற்சி ஆட்டத்தில் ரிதம் கண்டுபிடிக்க வேண்டும். முதல் போட்டி (ஜூன் 5) விளையாடுவதற்கு முன்பாக இந்த ஆடுகளத்தின் அனைத்து தன்மைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இங்குள்ள ஆடுகளங்கள் வேறு இடத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட டர்ப் மைதானங்களாகும். சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோல அடிக்கடி நடப்பதில்லை. அதனால் இந்த ஆடுகளம் எப்படி இருக்கிறது, ரிதம், ஃபிட்ச் என அனைத்தையும் கவனிக்க வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாங்கள் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.

பயிற்சியில் இந்திய வீரர்கள்.
நயன்தாராவின் உலகம்...!

இந்த ஆடுகளங்கள் அழகாக இருக்கின்றன. திறந்தவெளி மைதானங்களாக உள்ளன. முதல் போட்டி இங்கு வந்து விளையாடுவத்ஐ நினைக்க ஆவலாக இருக்கிறது. அதிகமான ரசிகர்களும் பார்க்க ஏதுவானது. நியூயார்க் மக்களுக்கு இது முதல்முறை என்பதால் அவர்களும் ஆவலுடன் இருப்பார்கள். நல்ல போட்டிகள் நடக்குமென நம்புகிறேன். ரசிகளை போலவே வீரர்களாகிய நாங்களும் ஆவலுடன் இருக்கிறோம்.

இந்தியா தனது முதல் போட்டியில் ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்துடன் மோதுகிறது. பயிற்சி ஆட்டம் ஜூன் 1ஆம் தேதி வங்கதேசத்துடன் விளையாடுகிறது இந்திய அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com