திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

57 பொதுச் செயலர்கள், 104 செயலர்கள்! தமிழ்நாடு காங்கிரஸில் தடாலடி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு 57 பொதுச்செயலர்களும் 104 செயலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சிக்கு 32 துணைத் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News image

57 பொதுச் செயலர்கள், 104 செயலர்கள்! தமிழ்நாடு காங்கிரஸில் தடாலடி

Updated On :2 ஜனவரி 2021, 4:29 pm IST

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு 57 பொதுச்செயலர்களும் 104 செயலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சிக்கு 32 துணைத் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாளராக மட்டும் ஒரே ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஏற்கெனவே கே.எஸ். அழகிரி செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மாநில காங்கிரஸ் கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியலை கட்சியின் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

நிர்வாகிகளின் பட்டியல் மிகப் பெரிய ஜம்போ பட்டியலாக விளங்குகிறது.

தலைவரும் பொருளாளரும்தான் தனியொருவர். பிற பதவிகள் அனைத்துக்குமே ஏராளமானோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு காலத்தில் இரண்டு அல்லது மூன்றாக இருந்து பின்னர் 4, 5 ஆக மாறிய பொதுச்செயலர்களின் எண்ணிக்கை தற்போது 57 ஆக அதிகரித்துள்ளது. இவர்களைத் தவிர்த்து இவர்களைப் போல இரு மடங்கு, 104 செயலர்கள் வேறு. குஞ்சம் குறைவாக 32 பேர்தான் துணைத் தலைவர்கள்.  

அனைத்து மாநில செயற்குழுவுக்கு 56 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 32 மாவட்டங்களுக்கும் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பிரதேச தேர்தல் குழு உறுப்பினர்களாக 34 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் அலுவல்பூர்வமாக மேலும் 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களாக 19 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழு மட்டுமின்றித் தேர்தல் பிரசாரக் குழுத் தனியே 38 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விளம்பரக் குழுவுக்கு 31 பேர், தேர்தல் அறிக்கைக் குழுவுக்கு 24 பேர், ஊடக ஒருங்கிணைப்புக் குழுவுக்கு 16 பேர், தேர்தல் மேலாண்மைக் குழுவுக்கு 6 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கட்சி ஏதாவது ஆலோசனைக் கூட்டம் நடத்துவதென்றால்கூட அனேகமாகத் திடல்களில்தான் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்போல! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.