பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன்கள் 40% குறைவு

சென்னை, ஆக. 21: பொருளாதார மந்தநிலை காரணமாக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கடன் வழங்கும் பணிகள் 40 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளன.   ஆட்டோமொபைல் போன்ற தொழில்களில் முதலீடு செய்ய யாரும் இப்போது முன்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:37 am

கே.பாலசுப்பிரமணியன்

சென்னை, ஆக. 21: பொருளாதார மந்தநிலை காரணமாக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கடன் வழங்கும் பணிகள் 40 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளன.

  ஆட்டோமொபைல் போன்ற தொழில்களில் முதலீடு செய்ய யாரும் இப்போது முன்வராததால் மருத்துவமனைகள், வணிக வளாகங்களின் கட்டுமானப் பணிகளுக்கு கடன்கள் வழங்குவதில் முன்னுரிமை காட்டிவருகிறது தொழில் முதலீட்டுக் கழகம்.

  தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியை, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மேற்கொண்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தக் கழகத்தின் மூலம் ஏராளமான கடன் உதவிகள் செய்யப்பட்டு வந்தன.

  ஆனால், இப்போது அதன் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணம், உலக அளவில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை.

  ""ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல் போன்ற துறைகளை ஊக்குவிக்கும் வகையில் கடன்களை வழங்கி வந்தோம். பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கு முன்பு, தொழில் முதலீட்டுக் கழகத்தின் செயல்பாடுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், இப்போது கடன் பெறுவோரின் விகிதம் 60 சதவீதமாகக் குறைந்துள்ளது. எங்களது பணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன'' என்றார் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் நிர்வாகி ஒருவர்.

  கடன் காலம் நீட்டிப்பு: முதலீட்டுக் கழகத்தில் கடன் வாங்கியோர் அதைக் கட்ட சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தையும் வாடிக்கையாளர்களுக்கு நீட்டித்துள்ளோம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

  ""கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 30 கோடிக்கு கடன் பெற்றோருக்கு அந்தக் கடன்களை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டித்துள்ளோம். பொருளாதார மந்த நிலையால் கடனை திருப்பிச் செலுத்துவது பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. இதனால், கடன் காலத்தை நீட்டித்துள்ளோம்'' என்கின்றனர் தொழில் முதலீட்டுக் கழக அதிகாரிகள்.

  மாற்றுத் திட்டங்கள்: ""பிரதான தொழில்களில் யாரும் இப்போது முதலீடு செய்ய முன்வராததால் 40 சதவீத கடன் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. காப்பீட்டுத் திட்டம், அரசு ஊழியர்கள் குடியிருப்புகளை வாங்குவதற்கு கடனுதவி போன்ற திட்டங்களை அரசின் முன்வைத்தோம். ஆனால், இதற்கு சட்ட விதிகள் இடம்தராது என்று நிராகரித்துள்ளனர். ஆட்டோமொபைல் போன்ற தொழில்களில் மட்டும் முதலீடு செய்ய நினைக்காமல், மாற்றுத் திட்டங்களை செயல்படுத்திட வேண்டும்'' என்று தொழில் முதலீட்டுக் கழக அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.