2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

பத்திரிகையாளர் சி.ஆர். கண்ணன் காலமானார்

சென்னை, ஜூலை 9: முதுபெரும் பத்திரிகையாளர் சி.ஆர். கண்ணன் (79) சென்னையில் வியாழக்கிழமை காலமானார்.  கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் பிறந்தவர் கண்ணன். முறையாக நடனம் பயின்று, திரைப்படத்

Updated On :

சென்னை, ஜூலை 9: முதுபெரும் பத்திரிகையாளர் சி.ஆர். கண்ணன் (79) சென்னையில் வியாழக்கிழமை காலமானார்.

 கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் பிறந்தவர் கண்ணன். முறையாக நடனம் பயின்று, திரைப்படத் துறையின் மூலம் கலையுலக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தினமணி கதிரில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து பத்திரிகையாளராக மாறியவர்.

 பத்திரிகையாளர் சாவியால் அவருக்கு சூட்டப்பட்ட புனைபெயர் "அபர்ணா நாயுடு'. அப்பெயரில் அவர் எழுதிய பல சிறுகதைகள் மற்றும் தொடர் கதைகள் தினமணி கதிர், கல்கி, சாவி, குங்குமம் மற்றும் பல முன்னணி பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

 "சகுந்த்' என்கிற புனைபெயரில் ஓவியர் ஜெயராஜும், சி.ஆர். கண்ணனும் இணைந்து வாராவாரம் தொடர்ந்து எழுதிய ஒரு பக்கக் கதைகள், தினமணி கதிரின் சிறப்பு அம்சமாகப் பேசப்பட்டது.

 அவரது கதையான "பகடை பன்னிரண்டு' திரைப்படமாகியுள்ளது. கமலஹாசன் உள்ளிட்ட முன்னணிக் கலைஞர்கள் அதில் நடித்துள்ளனர்.

 சி.ஆர். கண்ணன் ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளரும்கூட. "தற்கால ஜெர்மானிய சிறுகதைகள்' என்ற தொகுப்பிலுள்ள கதைகள் அவராலேயே மொழிபெயர்க்கப்பட்டவை.

 சிறிது காலம் உடல் நலமின்றி இருந்த கண்ணன், சென்னை பெசன்ட் நகரிலுள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை காலை உயிரிழந்தார். அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

 அவரது இல்ல தொலைபேசி: 044-24912660.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.