விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நனவாகும் 30 ஆண்டு கால கனவு!

பொன்னேரி, அக். 6: பழவேற்காடு பகுதி மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கையான பழவேற்காடு- லைட்ஹவுஸ் குப்பம் மேம்பாலப் பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:09 pm

பொன்னேரி, அக். 6: பழவேற்காடு பகுதி மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கையான பழவேற்காடு- லைட்ஹவுஸ் குப்பம் மேம்பாலப் பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் கடலோரக் கிராமமான பழவேற்காட்டை அடுத்து ஏரிக்கும், கடலுக்கும் நடுவே உள்ளது லைட்ஹவுஸ் குப்பம்.

இதைச் சுற்றி அரங்கம்குப்பம், கூனங்குப்பம், சாட்டங்குப்பம், திருமலைநகர், செம்பாசி பள்ளிகுப்பம், வைரவன் குப்பம், பசியாவரம் குப்பம், நடுக்குப்பம், கோரைக்குப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள் உள்ளன. இவற்றில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

மேம்பால திட்டத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் சுனாமி நிதியுதவித் திட்டத்தின்கீழ் ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர், கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பால கட்டுமானப் பணிகள் தொடங்கின.

1075 மீட்டர் நீளத்திலும், 12 மீட்டர் அகலத்திலும் மற்றும் அடியில் 21 காங்கிரீட் தூண்கள் நிறுவப்பட்டு, அயராது பணிகள் துரிதமாக நடைபெற்றதால், தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

எஞ்சியுள்ள 10 சதவீத கட்டுமானப் பணிகளும் வரும் நவம்பர் மாதத்திற்குள் முழுவதுமாக முடிவடையும் நிலையில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.