பொன்னேரி, அக். 13: புலிக்குளம் கிராமத்தில் புதிய ரயில் நிலைய பணிகள் மீண்டும் தொடங்கப்படுமா என்று அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.
பொன்னேரியை அடுத்த புலிக்குளம் கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள மேட்டுப்பாளையம், உத்தண்டிகண்டிகை, ஆத்திரேயமங்கலம், கொக்குமேடு, பொன்நகர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் சென்னைக்கோ, கும்மிடிப்பூண்டிக்கோ செல்லவேண்டும் என்றால், அனுப்பம்பட்டு ரயில் நிலையத்துக்கோ, பொன்னேரி ரயில் நிலையத்துக்கோ தான் வரவேண்டும். இதே போன்று இவர்கள் வெளியூர் சென்று வரும் போதும் மேற்கண்ட ரயில் நிலையங்களில் இறங்கிதான் புலிக்குளம் வரவேண்டும்.
இதனால் பொதுமக்களின் நலன் கருதி, புலிக்குளம் கிராமத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உத்தரவிட்டார்.
அதன்பேரில், பல லட்ச ரூபாய் செலவில் அங்கு புதிய ரயில் நிலையம் அமைக்க நடைமேடை, சிமெண்ட் தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால், அப்பணி சிறிது நாள்களிலேயே பல்வேறு காரணங்களால் நின்று போனது.
இப் பணியை மீண்டும் தொடங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் இடைவிடாது மேற்கொண்ட முயற்சியை அடுத்து, ரயில்வே இணை அமைச்சராக இருந்த ஆர். வேலு, புலிக்குளத்துக்கு வந்து நேரில் ஆய்வு செய்ததுடன், நின்று போன பணிகளை உடனடியாக தொடங்குமாறும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், ""இந்த இடம் தாழ்வாக உள்ளதால், அதை உயரப்படுத்திய பிறகு இப்பணிகளை தொடங்க முடியும்'' என்றனர்.
பின்னர், பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் உள்ளிட்டோர் இந்த இடத்தைப் பார்வையிட்டு முயற்சி எடுத்தும் இன்றுவரை பலன் ஏதுமில்லை.
இதனால் பரிதவிக்கும் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், புலிக்குளம் ரயில் நிலைய பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களது கோரிக்கைக்கு ரயில்வே நிர்வாகம் செவிசாய்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


