ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

தமிழ் இணையப் பல்கலை கழகத்துக்கு புதிய பெயர்: பன்னாட்டுத் தமிழ்ப் பயிற்சி இணையம்

சென்னை, ஏப்.1: தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அது, "பன்னாட்டுத் தமிழ்ப் பயிற்சி இணையம்' என்று இனி அழைக்கப்படும். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 1999-ம் ஆண்ட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:05 am

கே.பாலசுப்பிரமணியன்

சென்னை, ஏப்.1: தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அது, "பன்னாட்டுத் தமிழ்ப் பயிற்சி இணையம்' என்று இனி அழைக்கப்படும். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த 1999-ம் ஆண்டு, தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி, "இணைய வழியில் தமிழ் மொழியை வளர்க்கும் வகையில், "தமிழ் இணையப் பல்கலைக்கழகம்' ஒன்று அமைக்கப்படும்' என அறிவித்தார்.

1975-ம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் 27-வது பிரிவின் கீழ், இந்தப் பல்கலைக்கழகம் பதிவு செய்யப்பட்டது. ÷தமிழறிஞரும், பேராசிரியருமான வி.சி.குழந்தைசாமி தலைமையிலான ஆட்சிக் குழு இந்த பல்கலைக்கழகத்தின் பணிகளை கவனித்து வந்தது.

என்ன பணி?தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக மழலைக் கல்வி, சான்றிதழ் படிப்பு, பட்டயம், மேற்பட்டயம், பட்டம், முதுகலை என்ற நிலைகளில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நிலைக்கு ஏற்ப, தமிழ் மொழியில் உள்ள பாடங்கள் பாடத் திட்டமாக வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பல்கலைக்கழகம் தொடங்கிய காலத்தில், பட்டப் படிப்புகளுக்கான சான்றிதழ்களை அந்தப் பல்கலைக்கழகமே வழங்கியது.

திடீர் மாற்றம்:சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ், ஒரு பல்கலைக்கழகம் பதிவு செய்யப்பட்டதால் அது வழங்கும் சான்றிதழ் குறித்து கேள்வி எழுந்தது. இதைத் தொடர்ந்து, பட்டப் படிப்புகளுக்கான சான்றிதழ் வழங்கும் பொறுப்பு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஒவ்வொரு நிலைக்கு ஏற்ப படிப்புகளை இணையதளம் வழியாக கற்றுக் கொடுத்து, அதற்கான கட்டணத்தை தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வசூலிக்கிறது. வெளி நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 12 டாலர் என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு அதைவிடக் கட்டணம் குறைவாகும்.

பல்கலைக்கழகமாக்க நடவடிக்கை:சங்கத்தில் பதிவு செய்யப்பட்டதால் சான்றிதழை வழங்க முடியாத நிலை இணையப் பல்கலைக்கழகத்துக்கு ஏற்பட்டது. இதனால், பல்கலைக் கழக மானியக் குழுவின் அனுமதியைப் பெற்று அதை உண்மையிலேயே பல்கலைக்கழகமாக அறிவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள் பொருந்தவில்லை. இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகமாக்கும் முயற்சிகள் கைவிடப்பட்டன. "தமிழ் இணையப் பல்கலைக்கழகம்' என்பதை "பன்னாட்டுத் தமிழ்ப் பயிற்சி இணையம்' என பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இப்போது அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் பி.டபிள்யூ.டேவிதார் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அறிந்து கொள்ளவே தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

ஆனால், அதில் படித்து சான்றிதழ் பெறுவோருக்கு வேலைவாய்ப்பு, அரசுத் துறைகளில் பணியில் சேருவோருக்கு கூடுதல் தகுதியாகக் கருதுவது ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்போது தான், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இளைஞர்களிடம் பிரபலம் அடையும். இதற்கான நடவடிக்கை செம்மொழி மாநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழறிஞர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.