ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அதிக மகசூல் தரும் இயற்கை விதை நேர்த்தி

சிதம்பரம், ஏப். 7: பயிர்களின் முனைப்புத்திறன் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும், அதிகளவு மகசூல் பெறவும் விதை நேர்த்தி முறையை வேளாண்துறை மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் பரிந்துரையின்படி தமி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:12 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், ஏப். 7: பயிர்களின் முனைப்புத்திறன் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும், அதிகளவு மகசூல் பெறவும் விதை நேர்த்தி முறையை வேளாண்துறை மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் பரிந்துரையின்படி தமிழக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக வேதியியல் மற்றும் செயற்கை வேளாண் பூஞ்ஞாணக் கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் கொண்டு விதை நேர்த்தி செய்யும் போது பயிர்கள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்டாலும் நமது உணவும், நிலமும் விஷத்தன்மை மற்றும் மாசு அடைவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இத்தகைய சூழலில் விவசாயிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், அதிக லாபம் மற்றும் மகசூல் பெறவும் இயற்கை விதை நேர்த்தி செய்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இயற்கை விதை நேர்த்தி முறை: விவசாயிகள் தங்களின் விதைகளை இயற்கை முறையில் தயார் செய்யப்படும் ஆட்டூட்டக்கரைசல் (ஆட்டுப்புழுக்கை, ஆட்டு சிறுநீர், ஆட்டுப்பால், ஆட்டுத்தயிர், வாழைப்பழம், இளநீர், கடலைப் பிண்ணாக்கு, கரும்புச்சாறு மற்றும் கள் ஆகியவற்றை கொண்டு தயார் செய்யப்படும் கலவை) அல்லது பஞ்சகவ்யா கலவையை (சாணம், மாட்டு சிறுநீர், பால், தயிர், நாட்டுச்சர்க்கரை, வாழைப்பழம், கரும்புச்சாறு, கள், ஈஸ்ட் மற்றும் கடலைப் பிண்ணாக்கு) 300 மில்லி கிராம் என்ற அளவில் 10 லிட்டர் நீரில் கலந்து விதை நேர்த்திக்கு பயன்படுத்தலாம்.

நெல் மற்றும் கடினமான தோலுடைய விதைகளை 24 மணி நேரம் ஊற வைத்து விதைக்கலாம்.

இவ்வாறு விதை நேர்த்தி செய்தபின் விதைகளை நிழலில் நன்றாக உலர்த்திய பின்பே விதைக்க வேண்டும். இவ்வாறு இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்வதால் நாற்றுகள் நன்றாக வாளிப்பாக வளரும். அதிக எண்ணிக்கையில் வேர் பிடிப்பு காணப்படும். பயிர்கள் நன்றாக வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை பெறும், பூச்சிகள், நோய் தாக்குதல்கள் இருக்காது.

அடுத்த பருவத்திற்கு தேவையான விதைகளை பஞ்சகவ்யா அல்லது ஆட்டூட்டக் கரைசலில் நனைத்து நிழலில் காய வைத்து விவசாயிகள் எளிதாக சேமிக்கலாம். இதன் வாயிலாக விதைகளை பூச்சிகளும், நோயும் தாக்காது. முனைப்புத் திறனும் அடுத்த பருவத்திலும் குறையாமல் பாதுகாக்கப்படும்.

பிற பயன்கள்: நெல், தக்காளி நாற்றுகளை, வாழைக் கன்றுகளை பஞ்சகவ்யா மற்றும் ஆட்டூட்டக் கரைசலில் நனைத்து நடவு செய்யும் போது பூஞ்சானம், வைரஸ் மற்றும் வேர் புழுக்களின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படும். குறைந்த செலவில் விவசாயிகள் தங்களிடம் உள்ள இயற்கை வேளாண் பொருள்களை கொண்டு செய்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படும்.

மேலும் விவசாயிகள் அதிக மகசூல் மற்றும் லாபம் பெற முடியும். எனவே தமிழக விவசாயிகள் இயற்கை விதை நேர்த்தி வாயிலாக அதிக லாபம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவின் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.