பொன்னேரி, ஆக. 10: பொன்னேரி சுற்று வட்டார கிராமங்களுக்கு ஓட்டை உடைசல் பஸ்கள் இயக்கப்படுவதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
÷பொன்னேரியில் விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. இப் பணிமனையில் இருந்து பொன்னேரியை சுற்றியுள்ள பழவேற்காடு, மீஞ்சூர், காட்டூர், காட்டாவூர், மேல்பாக்கம், அரசூர், தேவம்பட்டு, அண்ணாமலைச்சேரி, திருப்பாலைவனம், மெதூர், விடதண்டலம், கள்ளூர், ஆலாடு, கல்பாக்கம், தத்தைமஞ்சி, பெரும்பேடு, கம்மார்பாளைம், கோளூர், மேட்டுப்பாளையம், ஆரம்பாக்கம், எளாவூர், கும்மிடிப்பூண்டி, ரெட்டிபாளையம், பெரியபாளையம், ஆரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.
÷இந்த பஸ்களில் நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களில் பெரும்பாலானவை ஓட்டை உடைசல் பஸ்களாக உள்ளன. படிக்கட்டுகள் உடைந்த நிலையில், வெளிப்புற தகடுகள் பெயர்ந்த நிலையிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை பயணிகளுக்கு காயம் ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் ஏறும்போது தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
÷இதனால் பெற்றோர் அச்சத்துடனேயே குழந்தைகளை பஸ்களில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலை உள்ளது. பயணிகளும் பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் இல்லாமல் பயணிக்க வேண்டியுள்ளது.
÷பஸ்களில் நிலை குறித்து பொன்னேரியில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக பணிமனை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, பஸ்கள் வழித்தடத்தில் இயக்கப்படும்போது திடீரென பழுதடைந்தால் அவை பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு சீர்செய்யப்பட்டு இயக்கப்படுகிறது என்றார்.
÷எனினும் மிகவும் பழுதடைந்த பஸ்களை முற்றிலும் அகற்றிவிட்டு நல்ல நிலையில் உள்ள பஸ்களை இயக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையம்: தாயைப் பிரிந்து சுற்றித்திரியும் குட்டியானை ஆற்றில் உற்சாக குளியல்!

எப்பவும் தனி வழிதான்: தனுஷ்

வாக்களித்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

பாஜகவுக்கு தாவிய ஹர்பஜன் சிங்! வீட்டுச் சுவரில் துரோகி வாசகம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


