கிராமச் சாலைகள் அமைப்பதில் பாராமுகம் ?
பொன்னேரி, ஆக. 20: பொன்னேரியைச் சுற்றிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் கிராம சாலைகள், அமைக்கப்பட்ட சில நாட்களுக்குள் குண்டும், குழியுமாக மாறி விடுவதாக புகார் எழுந்துள்ளது. ÷பொன்னேர


பொன்னேரி, ஆக. 20: பொன்னேரியைச் சுற்றிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் கிராம சாலைகள், அமைக்கப்பட்ட சில நாட்களுக்குள் குண்டும், குழியுமாக மாறி விடுவதாக புகார் எழுந்துள்ளது.
÷பொன்னேரி தாலுகாவில் சோழவரம் ஒன்றியத்தில் 39 கிராம ஊராட்சிகளும், மீஞ்சூர் ஒன்றியத்தில் 56 கிராம ஊராட்சிகளும் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களுக்கு செல்லும் பெரும்பாலான சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.
÷புதிதாக அமைக்கப்படும் சாலைகளும் தரமற்ற நிலையிலேயே இருப்பதால் சிறு மழைக்கே சாலைகள் பெயர்ந்து விடுகின்றன.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சமூக சேவகர் ஒருவர் கூறுகையில், நகரங்களில் இருக்கும் சாலைகள் நெடுஞ்சாலைத்துறை வசமும் கிராம பகுதிகளில் இருக்கும் சாலைகள் ஊராட்சி ஒன்றியம் வசமும் உள்ளது.
÷நெடுஞ்சாலைத்துறை வசம் இருக்கும் சாலைகள் பழுதானால் தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது. ஆனால் ஊராட்சி ஒன்றியங்கள் வசம் இருக்கும் சாலைகள் பழுதானால் நிதிச்சுமை காரணமாக சீரமைக்கப்படுவதில்லை. அத்துடன் கிராம பகுதிகளில் உள்ள சாலைகள் தரம் குறைந்த அளவிலேயே அமைக்கப்படுவதால் அச்சாலைகள் குறைந்த நாட்களிலேயே ஆயுளை இழக்கின்றன. மேலும் சாலை அமைக்கும் பணியை கண்காணிக்கும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் அதனை கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர் என்றார்.
÷சோழவரம் ஒன்றியத்தில் உள்ள மாதவரம்-ஆமூர் சாலை, ஆண்டார்குப்பம்- பெரவள்ளூர் சாலை, பாடியநல்லூர்- ஆட்டந்தாங்கல் சாலை, மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள மேட்டுப்பாளையம்-சிறுவாக்கம் சாலை, தேவதானம்-வெள்ளகுளம் சாலை, கங்காணிமேடு-மாங்கோடு சாலை, பெரும்பேடு-பொன்னேரி சாலை, குடிநெல்வாயல்-அகரம் சாலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.
÷கிராமச் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக இருப்பதன் காரணமாக இப்பகுதியில் உள்ள ஒரு சில கிராமங்களுக்கு பஸ் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிராம பகுதி மக்களின் போக்குவரத்தும் முடங்கிப்
போகிறது.
÷தேசிய நெடுஞ்சாலைகளை பலகோடி ரூபாய் செலவில் நான்கு வழிப்பாதைகள், ஆறு வழிப்பாதைகள் என மாற்றி வரும் அரசு, கிராமங்களில் வசிக்கும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு கிராமச் சாலைகளையும் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...