பொன்னேரி: மீஞ்சூர்- செங்குன்றம் வழித்தடத்தில் 10 கிராம மக்களுக்கு ஒரே ஒரு மாநகர பஸ் (எண் 558க) இயக்கப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
÷பொன்னேரி தாலுகாவில் உள்ள சிறுவாக்கம், கங்கையாடிகுப்பம், ஜெகந்நாதபுரம், சத்திரம், குதிரைப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
÷இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் மீஞ்சூர், பொன்னேரி அல்லது செங்குன்றம் செல்ல வேண்டும். அத்துடன் இப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்ல பொன்னேரி வர வேண்டும். மேற்கண்ட கிராமங்களுக்கு சென்னை மாநகர பஸ் செங்குன்றம், சோழவரம், காரனோடை, ஜனப்பசத்திரம் கூட்ரோட், அழிஞ்சிவாக்கம், ஜெகந்நாதபுரம், கங்கையாடிகுப்பம், குதிரைப்பள்ளம், அகரம், சத்திரம், சிறுவாக்கம், மேட்டுப்பாளையம், வன்னிப்பாக்கம், நாலூர் ஆகிய கிராமங்கள் வழியாக மீஞ்சூர் வரை தினமும் ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.
÷இந்த ஒரு பஸ்ஸýம் ஒரு நாளைக்கு நான்கு முறை மட்டும் வந்து செல்கிறது. இதன் காரணமாக இப்பகுதி மக்களின் போக்குவரத்து சுருங்கிப்போனது. தாலுகா தலைநகராக உள்ள பொன்னேரிக்கு நேரடி பஸ் வசதி இல்லை. மேற்கண்ட கிராம மக்கள் பொன்னேரி செல்ல மேட்டுப்பாளையம் சென்று அங்கிருந்து மற்றொரு பஸ் பிடித்துதான் செல்ல வேண்டிய அலைக்கழிப்புக்கு ஆட்பட்டுள்ளனர்.
÷எனவே சென்னை மாநகர போக்குவரத்து கழகம் செங்குன்றத்தில் இருந்து இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்றும், பொன்னேரியில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பொன்னேரி, மேட்டுப்பாளையம், சிறுவாக்கம் வழியாக செங்குன்றத்துக்கு மேற்கண்ட கிராமங்கள் வழியாக புதிய வழித்தடத்தில் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையம்: தாயைப் பிரிந்து சுற்றித்திரியும் குட்டியானை ஆற்றில் உற்சாக குளியல்!

எப்பவும் தனி வழிதான்: தனுஷ்

வாக்களித்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

பாஜகவுக்கு தாவிய ஹர்பஜன் சிங்! வீட்டுச் சுவரில் துரோகி வாசகம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


