எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கழிவுநீர் கலப்பதால் கூவமாக மாறிவரும் சுகநதி

வந்தவாசி : கழிவுநீர் கலப்பதால் வந்தவாசி சுகநதி கூவமாக மாறிவருகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.   வந்தவாசி நகரை ஒட்டிச் செல்லும் சுகநதி சுமார் 67 கி.மீ. நீளம் கொண்டதாகும். மேல்பாதி கிராம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:30 am

கணேஷ்கிரி

வந்தவாசி : கழிவுநீர் கலப்பதால் வந்தவாசி சுகநதி கூவமாக மாறிவருகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

  வந்தவாசி நகரை ஒட்டிச் செல்லும் சுகநதி சுமார் 67 கி.மீ. நீளம் கொண்டதாகும். மேல்பாதி கிராம ஏரியின் முடிவிலிருந்து தொடங்குவதாக கூறப்படும் இந்த ஆறு மதுராந்தகம் ஏரியில் சென்று முடிவடைகிறது. இந்த ஆறு பழங்காலத்தில் சூக்க ஆறு என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆற்றின் மூலம் சுமார் 10 ஆயிரம் ஹெக்டர் நிலம் பயன்பெற்று வருகிறது.

 இதுதவிர÷குளிப்பது, சலவை செய்வது உள்பட வந்தவாசி மக்களுக்கு இந்த ஆறு பல்வேறு வழிகளில் மிகவும் பயன்பட்டு வந்தது.

 இந்த நிலையில்,  வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட கேவிடி நகர், பொட்டிநாயுடு தெரு, வீராசாமி முதலி தெரு, சைக்கிள் வரதராஜ முதலி தெரு உள்ளிட்ட தெருக்களின் கழிவுநீர் வடிய சரியான வடிகால் வசதி இல்லாததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யாரோ சிலர் ஆற்றின் அருகே உள்ள சைக்கிள் வரதராஜ முதலி தெருவிலிருந்து ஆறுவரை 2 பக்கமும் கால்வாய்களை வெட்டிவிட்டனர்.

  இதனால் இத்தெருக்களின் கழிவுநீர் அனைத்தும் நேரடியாக ஆற்றில் கலக்கத் தொடங்கியது. இதனால் குளிக்கவும், துணி துவைக்கவும் இந்த ஆற்றை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் விதமாக கேவிடி நகரிலிருந்து கலைமகள் சபா திருமண மண்டபம் வழியாக யாதவர் தெரு வரை கழிவுநீர் கால்வாய் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் கழிவுநீர் கால்வாய் கலைமகள் சபா திருமண மண்டபம் அருகே வரை மட்டுமே

கட்டப்பட்டது.

  இதனால் கழிவுநீர் ஆற்றில் கலப்பது தொடர்கதையாகியது. இதனால் ஆற்று நீர் மேலும் மாசடைந்து தற்போது ஆற்று நீரில் கால் வைக்கவே அஞ்சும் அளவுக்கு உள்ளது. எனவே கலைமகள் சபா திருமண மண்டபம் அருகிலிருந்து யாதவர் தெரு வரை உள்ள சுமார் 200 அடி தூரத்துக்கு கால்வாய் அமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டுவிடும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

  சுகநதியில் ரூ.50 லட்சம் செலவில் படகு குழாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகம் கூறிக் கொள்கிறது. ஆனால் அந்த சுகநதி கூவமாக மாறிவருவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.