தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிமே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

'போட்டிகளுக்கான சிறப்பு தபால் அட்டை' யோசனை கூறியவரை மறந்துவிட்ட தபால்துறை

சென்னை, பிப். 4: பல கோடி ரூபாய் வருவாயை தபால் துறைக்கு ஈட்டித் தரும் "போட்டிகளுக்கான சிறப்பு தபால் அட்டை' குறித்து யோசனை கூறியவரை பாராட்டி கௌரவிக்க தபால் துறை மறந்துவிட்டது. மறுத்தும் வருகிறது. "டி.வி

Updated On :20 செப்டம்பர் 2012, 10:06 am

சென்னை, பிப். 4: பல கோடி ரூபாய் வருவாயை தபால் துறைக்கு ஈட்டித் தரும் "போட்டிகளுக்கான சிறப்பு தபால் அட்டை' குறித்து யோசனை கூறியவரை பாராட்டி கௌரவிக்க தபால் துறை மறந்துவிட்டது. மறுத்தும் வருகிறது.

"டி.வி.' நிகழ்ச்சிகள், வார இதழ்களில் வெளியிடப்படும் போட்டிகளில் பங்கேற்க, போட்டிகளுக்கான சிறப்பு தபால் அட்டையில் விடைகளை எழுதி அனுப்ப வேண்டும். அப்போதுதான் ஏற்றுக்கொள்ளப்படும்.

1994}ம் ஆண்டுக்கு முன்பு தபால் துறையில் "போட்டிகளுக்கான சிறப்பு தபால் அட்டை' என்ற தனி அட்டை எதுவும் கிடையாது. வழக்கமான "15 பைசா' தபால் அட்டைகளே, போட்டிகளுக்கும் பயன்படுத்தப்பட்டன.

மதுரையைச் சேர்ந்தவரும் தொழிலாளர் காப்பீடு நிறுவனத்தின் ஓய்வுபெற்ற உதவி இயக்குநருமான வி. பாலகிருஷ்ணன் அளித்த யோசனையின் பேரிலேயே, "போட்டிகளுக்கான சிறப்பு தபால் அட்டை' என்ற தனி அட்டை ஒன்று தபால் துறையில் கடந்த 1994}ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பாலகிருஷ்ணன் 30}6}1994 தேதியிட்ட கடிதம் மூலம், இந்த யோசனையை மதுரை தபால் துறை அதிகாரிக்கு தெரிவித்துள்ளார்.

"தபால் துறை மூலம் 15 பைசாவுக்கு விற்கப்படும் தபால் அட்டையை தயார் செய்ய, அரசுக்கு ஒரு ரூபாய் வரை செலவாகிறது. அடித்தட்டு மக்களின் பயன்பாட்டுக்காக குறைந்த விலையில் விற்பதால், அரசுக்கு 85 பைசா நஷ்டம் ஏற்படுகிறது. ஆனால், இந்த அட்டையே "டி.வி.' மற்றும் வார இதழ்களில் கேட்கப்படும் போட்டிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த போட்டிகளில் பங்கேற்கும் ஒவ்வொருவரும், பரிசு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான அட்டைகளில் விடைகளை எழுதி அனுப்புகின்றனர். இந்தப் போட்டிகளில் குழுக்கல் முறையில் ஒருவரே தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஏழை மக்களுக்காக 15 பைசாவுக்கு விற்கப்படும் தபால் அட்டை, போட்டிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வீணாவதைத் தடுப்பதற்காக "போட்டிகளுக்கான சிறப்பு அட்டை' ஒன்றை புதிதாக அறிமுகம் செய்ய வேண்டும். அதன் விலையை ரூ. 1 என நிர்ணயிக்க வேண்டும்' என்று கடிதத்தில் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதம் தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்த கருத்து முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, "போட்டிகளுக்கான தபால் அட்டை' என்ற தனி அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கான விலை ஒரு ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்தியாவில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 107}வது பிறந்த நாளான 14.11.1996 தேதி முதல், சிறப்பு அட்டை வர்த்தக ரீதியில் வெளியிடப்பட்டது. ஒரு ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சிறப்பு அட்டை ரூ. 2, ரூ. 3 மற்றும் ரூ. 5 என படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு இப்போது ரூ. 10}க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் தபால் துறை பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது.

பாலகிருஷ்ணனின் சிறப்பான யோசனையை பாராட்டி, "மதுரை பாரத் சமூக நல இயக்கம்' அவருக்கு 19.4.2000 அன்று விருது வழங்கியது. எனினும், பாலகிருஷ்ணனை பாராட்டி கௌரவிக்க, தபால் துறை மறந்துவிட்டது. இதற்கிடையே, முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ். ராம்பாபு, பாலகிருஷ்ணனைப் பாராட்டி அவருக்கு விருது வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று 13.11.97}ல் சென்னை தலைமை தபால் துறைத் தலைவர் எஸ்.டி. பாஸ்கரனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்துக்கு பதில் அளித்த பாஸ்கரன், "பாலகிருஷ்ணனுக்கு உரிய கெüரவம் அளிக்க ஏற்பாடு செய்யப்படும்' என்று 24.11.97}ல் ராம்பாபுக்கு பதில் அனுப்பினார். ஆனால், இதுநாள் வரை தபால் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக குடியரசுத் தலைவர், பிரதமர், தகவல் தொடர்புத் துறை அமைச்சகம், தபால் துறை உயர் அதிகாரிகள் என பலருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தும், பாலகிருஷ்ணன் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.