டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மாநில நுகர்வோர் ஆணையக் கிளை மதுரையில் அமைவது எப்போது?

புதுக்கோட்டை: மாநில நுகர்வோர் ஆணையக் கிளையை மதுரையில் தொடங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். நுகர்வோர் பாதிக்கப்பட்டதாக உணரும

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:25 pm

ஆா்.மோகன்ராம்

புதுக்கோட்டை: மாநில நுகர்வோர் ஆணையக் கிளையை மதுரையில் தொடங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

நுகர்வோர் பாதிக்கப்பட்டதாக உணரும்போது உரிய பாதுகாப்பும் இழப்பீடும் கோரி அணுகுபவையே நுகர்வோர் குறைதீர் மன்றங்களாகும். ஏனைய நீதிமன்றங்களைப்போல அல்லாமல், மிக எளிய முறையில் முறையீடு செய்து, பாதிக்கப்பட்ட நுகர்வோர் இழப்பீடு பெறும் வகையில் கடந்த 1986-ல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. 

இதனடிப்படையில், நுகர்வோர் குறைகளைத் தீர்க்க தமிழகத்தில் புதுக்கோட்டை உள்பட 28 மாவட்டங்களில் நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.  மாவட்ட அளவிலான இந்த நீதிமன்றங்கள் மூலமாக ரூ. 20 லட்சம் வரையிலும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் மூலம் ரூ. 1 கோடி வரையிலும் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் மூலம் ரூ. 1 கோடிக்கு மேலும் இழப்பீடு பெறும் வகையில் நுகர்வோர் நீதியமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதில் வழங்கப்படும்  தீர்ப்புகள் மீது மேல் முறையீடு செய்ய அனைவரும் சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், ஏறத்தாழ 20 முதல் 30 சத வீத நுகர்வோர் மேல் முறையீடு செய்யும் சூழ்நிலையில், வழக்குக்காக சென்னைக்கு சென்று வருவது வழக்காடிகளைப் பாதிப்புக்குள்ளாக்குகிறது.

குறிப்பாக, கன்னியாகுமரி, நெல்லை, கோவை, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த நுகர்வோர் இதனால் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

அதனால், அனைத்துத் தரப்பினரின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு தென் மாவட்ட மக்கள் பயனுறும் வகையில், மதுரையில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையக் கிளையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.  இதை வலியுறுத்தி தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக பல போராட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் மதுரையில் கிளை அமைக்க தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தது. இதற்கென்று தனியாகக் கட்டடம் மற்றும் ஊழியர்கள்  தேவையில்லை எனவும் இருக்கும் வசதிகளைப் பயன்படுத்தியே  மாநிலக் கிளை செயல்பட கூடுதலாக இரு உறுப்பினர்களை நியமிக்கலாம் எனவும் பரிந்துரைத்தது.

இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மாநிலக் கிளையை மதுரையில் நிறுவ கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து,  மாநில ஆணையத்தில் நீதித் துறைசார் உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரண்டிலிருந்து நான்காக உயர்த்த அனுமதி கிடைத்ததால், 2 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.  இதையடுத்து, தென் மாவட்ட நுகர்வோர் தங்களுக்கு விடிவு ஏற்பட்டதாக நிம்மதியடைந்தனர். ஆனால், மாதங்கள் பல கடந்ததே தவிர இதுவரை ஆணையம் செயல்பாட்டுக்கு வராத நிலைதான் நீடிக்கிறது.

இதுகுறித்து நுகர்வோர் விழிப்புணர்வுச் சங்க மனித உரிமைக் கூட்டமைப்பின் மாநிலப் பொருளாளர் சொ. பழனியப்பன் கூறியது:

""தமிழக அரசின் மதுரை உயர் நீதிமன்ற வளாகத்தில் பல லட்சம் செலவில் தனிக் கட்டடம் அமைக்கப்பட்டது. மேலும், அனைத்துவிதமான அடிப்படை வசதிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. ஆனால், தொடங்குவதில் ஏன் தாமதமாகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது'' என்றார் சொ. பழனியப்பன்.

இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் சு. தனவேலு கூறியது:

""தென் மாவட்ட மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் மதுரையில் உயர்நீதி மன்றக் கிளை அமைக்க அரை நூற்றாண்டு காலம் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு பல வழிகளில் இடையூறுகள் வந்தன; எல்லாவற்றையும்  மீறியே அமைந்தது.   அதுபோல, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் கிளையை மதுரையில் தொடங்குவதிலும் சிக்கல் நீடிக்கிறது. அதே வகையிலான இடையூறுகளே இதற்கும் காரணம். அரசு அனுமதியளித்து அதற்கென பல லட்சம் மக்கள் பணம் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில்,  இதுநாள் வரை தாமதம் நீடித்துவருவது  மக்களின் உணர்வுகளை புறக்கணிக்கும் செயலாகும்'' என்றார் சு. தனவேலு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.