வீதியில் நிற்கும் ​முன்னாள் ராணுவ வீரரின் குடும்பம்

பண்ருட்டி, மார்ச் 14: மாற்று இடம் தருவதாகக் கூறி ஆக்கிரமிப்பை அகற்றிய வருவாய்த் துறையினர், மாற்று இடம் தராததால் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி செந்தாமரை (63), மனநிலை பாதிக்கப்பட்ட தனது இரு பெண்களுடன் சா
வீதியில் நிற்கும் ​முன்னாள் ராணுவ வீரரின் குடும்பம்
Updated on
2 min read

பண்ருட்டி, மார்ச் 14: மாற்று இடம் தருவதாகக் கூறி ஆக்கிரமிப்பை அகற்றிய வருவாய்த் துறையினர், மாற்று இடம் தராததால் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி செந்தாமரை (63), மனநிலை பாதிக்கப்பட்ட தனது இரு பெண்களுடன் சாலை ஓரத்தில் பாதுகாப்பின்றி வசித்து வருகிறார்.

பண்ருட்டி வட்டம் சேமக்கோட்டை ஊராட்சி ஏரிப்பாளையம் கேட் அருகே நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் முன்னாள் ராணுவ வீரர் மறைந்த ஆறுமுகத்தின் மனைவி செந்தாமரை உள்ளிட்ட சிலர் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்தனர்.

இவர்களது குடியிருப்புக்கு அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர் சிவனேசன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையின் மீது வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 1.12.2009-ல் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு அகற்ற முன்றபோது இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினரும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டு மாற்று இடமும், கால அவகாசமும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து சேமக்கோட்டை கிராமத்தில் உள்ள வண்டிப்பாதை புறம்போக்கில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டு, 20.1.2010-ல் நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

வருவாய்த் துறை அதிகாரிகளால் ஒதுக்கப்பட்ட இடத்தில் செந்தாமரை, தண்டபாணி, பாண்டியன், குப்பம்மாள் ஆகியோர் கட்டிய குடிசை வீடுகளை அருகில் உள்ள நில உரிமையாளரான அய்யனார் என்பவர் பிரித்தெரிந்து பண்ருட்டி வட்டாட்சியருக்கு வழக்கு நோட்டீஸ் அனுப்பியதால் பாதிக்கப்பட்டவர்கள் வீடின்றி அவதி அடைந்தனர்.

இதை விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் 12.2.2010-ல் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து 10.2.2010-ல் வட்டாட்சியர் அலுவலக்தில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சேமக்கோட்டையில் ஒதுக்கப்பட்ட வண்டிப் பாதை புறம்போக்கு இடம் பிரச்னையில் உள்ளதால், பாதிக்கப்பட்ட நான்கு குடும்பத்துக்கும் தாற்காலிகமாக வையாபுரிப்பட்டினம் கிராமத்தில் உள்ள தோப்பு புறம்போக்கு இடத்தில் மாற்று இடம் வழங்க முடிவு செய்யப்பட்டு, துரித நடவடிக்கை எடுக்க அங்குசெட்டிப்பாளையம் கிராம நிர்வாக அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனால் சாலை மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் துரிதமாக அளிப்பதாக பேச்சு வார்த்தையில் கூறிய வருவாய்த் துறையினர், 25 நாள்களுக்கு மேலாகியும் மாற்று இடம் வழங்கப்படவில்லை.

வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட 4 குடும்பத்தினரும் சுமார் 50 நாள்களாக குழந்தைகளுடன் சாலை ஓரத்தில் பாதுகாப்பின்றி வசித்து வருகின்றனர்.

இது குறித்து தினமணி நிருபரிடம் பாதிக்கப்பட்டவர்கள் கூறியது:

செந்தாமரை: எனது கண வர் ஆறு மு கம் முன்னாள் ராணுவ வீரர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். 6 மகள்களில் உண்ணாமலை (28), அஞ்சலாட்சி (26) ஆகிய இருவருக்கும் மனநிலை சரியில்லாததால் என்னுடைய பாதுகாப்பில் உள்ளனர்.

அருகில் டாஸ்மாக் கடை உள்ளதால் பெண் பிள்ளைகளுடன் பாதுகாப்பற்ற நிலையில் வசித்து வருகிறேன். இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கல்வீசி வருகின்றனர் என வேதனையுடன் கூறினார்.

தண்டபாணி: எனது மகள் தீபா கட லூ ரில் முத லா மாண்டு ஆசி ரியர் பயிற்சி படித்து வருகிறார். வீடுமில்லை, மின் விளக்கும் இல்லை இதனால் எனது மகளின் படிப்பு வீணாவதுடன் பாதுகாப்பும் இல்லை என கூறினார்.

பாண்டியன்: எனது மகன் நட ராஜ் மூன் றாம் ஆண்டு பொறி யியல் படிப்பு படித்து வருகிறான் வீடும், விளக்கும் இல்லாததால் தெரு விளக்கில் படித்து வருகிறான் என கூறியவர் ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும் சமயத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரவு நேரத்தில் கொட்டும் பனியில் தெரு விளக்கில் பிள்ளைகள் படிப்பதை பார்க்கும் போது மன வேதனை அடைவதாகவும் கூறினார்.

எனவே பாதிக்கப்பட்ட மக்களின் நலனையும், படிக்கும் மாணவர்களின் நலனையும் கருதி வருவாய் நிர்வாகம் மாற்று இடம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோள்.

நாட்டை பாதுகாக்க போராடிய முன்னாள் ராணுவ வீரரின் குடும்பம் பாதுகாப்பற்று ரோட்டில் கிடக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வுக் காண இனியாவது வருவாய்த் துறை கண் விழிக்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com