புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

10 ஆண்டுகளாக நிரப்பப்படாத பணியிடங்கள்: திணறும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள்

சென்னை, மே 5: கடந்த 10 ஆண்டுகளாக காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால்,  காவல் துறை அமைச்சுப் பணியாளர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் காவல் துறை சார்ந்த பல்வேறு பிரிவுகளில் இப்போது பணியில் உள்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:57 pm

ச. குமரன்

சென்னை, மே 5: கடந்த 10 ஆண்டுகளாக காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால்,  காவல் துறை அமைச்சுப் பணியாளர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் காவல் துறை சார்ந்த பல்வேறு பிரிவுகளில் இப்போது பணியில் உள்ள போலீஸôரின் எண்ணிக்கை 1.04 லட்சமாக அதிகரித்துள்ளது. சிறப்பு காவல் அணியினர், அதிரடிப் படையினர், ரயில்வே போலீஸôர், பெண் காவலர்கள் உள்ளிட்ட அனைத்து போலீஸôருக்கும் ஊதியம் வழங்குவது, பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்துவது, ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பயன்களை வழங்குவது உள்ளிட்ட பணிகளை காவல்துறை அமைச்சுப் பணியாளர்களே செய்து வருகின்றனர்.

இதுதவிர திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சி மையங்களுக்கான உரிமம், துப்பாக்கி உரிமம்  ஆகியவற்றை வழங்கும் பணியையும் இவர்கள்தான் மேற்கொள்கின்றனர்.

ஆனால், போலீஸôரின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த விகிதத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 4,400 அமைச்சுப் பணியாளர்களே பணியில் உள்ளனர்.

மத்திய, தெற்கு, மேற்கு, வடக்கு என 4 மண்டலங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இந்த உதவியாளர்கள் பின்பு பணி மூப்பு அடிப்படையில் இளநிலை உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றுவந்தனர்.

ஆனால், காவல்துறையின் அமைச்சுப் பணியாளர்கள் பிரிவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை.

பொதுவாக டி.என்.பி.எஸ்.சி. மூலம் 55 சதவீதமும்,  உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்குவதன் மூலம் 20 சதவீதமும் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதுதவிர கருணை அடிப்படையில் 25 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டன.

ஆனால், கடந்த பல ஆண்டுகளாக கருணை அடிப்படையிலான பணி நியமனமும் செய்யப்படவில்லை. இதற்கான காத்திருப்போர் பட்டியலில் 1500 பேர் வரை இடம் பெற்றுள்ளனர்.

போதிய பணியாளர்கள் நியமிக்கப்படாததால் பணிச் சுமையால் ஏற்கெனவே திணறும் அமைச்சுப் பணியாளர்களுக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுத்துப் பூர்வமாக தகவல் திரட்டி வழங்குவது மிகப் பெரும் சவாலாக உள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஆணையத்துக்கு ரூ. 10 கட்டணம் செலுத்தி போலீஸôர் மற்றும் காவல்துறை சார்ந்த பல்வேறு தகவல்களை திரட்டி 30 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால், மாவட்டங்கள்தோறும் தினமும் வரும் 20 மனுக்களில் உள்ள கேள்விகளுக்கு காவல்துறை ஆவணங்களில் இருந்து ஆதாரப்பூர்வமான பதில்களை திரட்டுவது இவர்களின் இதர அலுவல்களைப் பாதித்துள்ளது.

அலுவலகங்களில் அன்றாடப் பணிகளுக்குத் தேவையான ஜெராக்ஸ் இயந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்கள் மற்றும் எழுதுபொருள்களை விநியோகிப்பதிலும் தேக்கநிலை உள்ளது.

பெரும்பாலான அமைச்சுப் பணியாளர்கள் 45 வயதைக் கடந்து விட்ட நிலையில், கணினிப் பயிற்சி உள்ளிட்ட பணியிடைப் பயிற்சிகளை வழங்குவதிலும் மந்தகதியே உள்ளது. இதனால், இணையதளம், மின்னஞ்சல் உள்ளிட்ட  மின் ஆளுமை முறைகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாக காவல்துறை அமைச்சுப் பணியாளர் பிரிவு அலுவலகங்கள் கணினிமயமாக்குவதும் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றது.

இந்த நிலையில் காவல் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தமாக போலீஸôரின் விகிதத்துக்கு ஏற்ப அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சுப் பணியாளர்களை விரைவில் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.