தமிழகத்தில் பணிபுரியும் சீருடைப் பணியாளர்களான போலீஸôருக்கு தமிழக அரசு மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியவாசியப் பொருள்களை வழங்கி வருகிறது. இதற்கான விலை சென்னையில் உணவுத் துறை அமைச்சகத்தின் மூலம் இறுதி செய்யப்பட்டு, விலை புள்ளிகள் மாநில நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் மூலம் நியாயவிலைக் கடைகளில் போலீஸôருக்கு இப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது விநியோகிக்கப்படும் பொருள்களின் விலை மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடுவதாக கூறப்படுகிறது.