புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஒரு விசாரணை: (நாடக விமர்சனம்)

ஓரு குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்கள் -ஒரு இன்ஸ்பெக்டர் இந்த ஆறு பாத்திரங்களை மட்டும் வைத்து இரண்டு மணி நேரம் சற்றும் தொய்வில்லாத நாடகத்தைத் தயாரிப்பதுஎன்பது இன்றைய தமிழ் நாடகச் சூழலில் மிகவும் சவாலான

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:59 pm

ஓரு குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்கள் -ஒரு இன்ஸ்பெக்டர் இந்த ஆறு பாத்திரங்களை மட்டும் வைத்து இரண்டு மணி நேரம் சற்றும் தொய்வில்லாத நாடகத்தைத் தயாரிப்பதுஎன்பது இன்றைய தமிழ் நாடகச் சூழலில் மிகவும் சவாலான விஷயம். இந்த நாடகத்தைத் தயாரித்து இயக்கியிருப்பதன் மூலம் அந்தச் சவாலை மிகச் சாதுர்யமாக சமாளித்திருக்கிறார் ஞாநி.

பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜே.பி.பிரீஸ்ட்லி சுமார் அரை நூற்றாண்டுக்குமுன்பு எழுதிய "அன் இன்ஸ்பெக்டர் கால்ஸ் (IN S P E C T OR CA LLS) என்கிற புகழ்பெற்ற நாடகத்தின் தமிழ் வடிவமே இந்த "ஒரு விசாரணை'தொழிலபதிபர் குமாரசாமி தனது மகள் பிரியாவின் நிச்சயதார்த்தம் முடிந்த மகிழ்ச்சியில் மனைவி, மகன், மகள், வருங்கால மருமகன் இவர்களோடு மது விருந்து நடத்தி பார்ட்டி உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் வீட்டுக்கு வரும் போலிஸ் இன்ஸ்பெக்டர் சத்யன், ஆனந்தி என்கிற ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டது தொடர்பாக அந்த ஐந்து பேரிடமும் விசாரணை மேற்கொள்ளுகிறார்.

அவர்களில் ஒருவருக்குக்கூட அந்தப் பெண்ணின் மரணத்தில் துளியும் சம்பந்தமில்லை என்பது போல் தொடங்கும் அந்த விசாரணை, அவள் சாவுக்குத் தானே முக்கிய காரணம் என்று ஒவ்வொருவரும் குற்ற உணர்ச்சி கொள்ளுமாறு முடிகிறது .

விசாரணை முடித்து இன்ஸ்பெக்டர் போனபின் அந்த ஐந்து பேரும் அந்த விசாரணை குறித்து பல கோணங்களில் யோசிப்பதும்அதனைத் தொடர்ந்து வரும் ஒரு அதிர்ச்சியான தொலைபேசி செய்தியைக் கேட்டு மொத்த குடும்பமும் திகைத்து நிற்பதாக முடிகிறது நாடகம்.

இடைவெளியின்றி தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கான வசனங்களை மனப்பாடமாக வைத்திருந்துபேசியதற்காகவே இந்த நடிகர்களை முதலில் பாராட்டியாக வேண்டும்.

கண்டிப்பான தொழிலபதிராகவும் பாசமுள்ள தகப்பனாகவும் பரிதவிக்கும் ராம்ஜி(குமாரசாமி), வீண் ஆடம்பரமும் வறட்டு கெüரவமுமாக வாழ்க்கை நடத்தும் பாத்திமா பாபு(ராஜேஸ்வரி), படபடவெனப் பொரிந்து தள்ளும் இன்றைய தலைமுறை பெண்ணின் குறியிடான ஐஸ்வர்யா(பிரியா), குடும்பத்தோடு ஒட்டவும் முடியாமல் விலகவும் முடியாமல் தடுமாறும் சுபாஷ்(ரவி), விருந்துக்கு வந்த இடத்தில் அவமானப்பட நேர்ந்த தனசேகரன்(பாஸ்கர்) இவர்களுக்கெல்லாம் மேலாக இந்த நாடகத்தின் அசல் ஹீரோவான நீல்சன்(இன்ஸ்பெக்டர் சத்யன்) இவர்கள் எல்லாருமே அவரவர் பாத்திரத்தின் தன்மைகளை நன்கு உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கின்றனர்.

விசாரணையின் கோணம் மாற மாற ஒவ்வொருவரும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட நாடகமானாலும் பத்மஸ்ரீவிருது, கியூபா, மேதா பட்கர், அருந்ததி ராய், போயஸ் கார்டன் போன்ற பல விஷயங்கள் கலந்து வருவதால் இன்றைய தேதிக்கும் பொருந்திதான் இருக்கிறது.

நாடகத்தின் மிகப் பெரிய பலம் கூர்மையான வசனங்கள். "பொம்பளைங்களுக்கு டிரஸ்ஸþங்கறது அவங்க சுய மரியாதைக்கு ஒரு அடையாளமா நினைக்கிறாங்க' "அவருதான்நமக்கு இடம் குடுத்திருக்காரு ஆறடி இடம்" போன்றவற்றை குறிப்பிடலாம்.

இருந்தாலும் இன்ஸ்பெக்டர் "தொழிலாளர்கள், உலகத்தைத் தாங்களே பிடுங்கி எடுத்துக்கிறதவிட கேக்கறது மேல் இல்லையா?' என்று கேட்பதும் "கார்மண்ட் யூனிட்லயும் ஜவுளிக்கடையிலயும் வேலை பார்க்கும் இளம் பெண்கள் தாழ்ப்பாள் இல்லாத சின்ன பாத்ரூம்ல கையில் இருக்கும் காச பைசாபைசாவா எண்ணிப் பார்ப்பதைப் பற்றி யோசிப்பேன்' என்று கூறுவதும் அந்தப்பாத்திரத்திற்குப் பொருத்தமில்லாததாக தோன்றுகிறது.

குமாரசாமியின் பார்ட்டி உரையைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். அதுபோலவே இன்ஸ்பெக்டர் வெளியேறியபின் பாஸ்கர் வீட்டுக்கு வரும் பகுதியும் சற்று நீளம். (திரைப்படத்தில் போலீஸ் வந்தால் படம் முடிந்த உணர்வு வருவது போல் இந்த நாடகத்தில் போலீஸ் போனதும் நாடகம் முடிந்த உணர்வு வந்து விட்டது ஒரு காரணமாக இருக்கலாம்.)

இந்தக் கதையின் அத்தனை பாத்திரங்களுடனும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தபட்டிருக்கும் அந்த ஆனந்தியின் புகைப்படத்தைக்கூட பார்வையாளர்களுக்குக் காட்டாமல் நாடகத்தை நகர்த்தி சென்றிருக்கும் யுக்தி பாராட்டுக்குரியது.

பிரியாவின் பிராமண பாஷையும்(நீ மாட்டுக்குப் பேசிண்டே இருக்காதம்மா) நீல்சனின் மதுரை பாஷையும் (அடுத்த வட்டம் அவள எங்க பாத்தே?) அடுத்த முறை மாறிவிடும் என்று நம்புவோம்.

மோசமான நாடகங்கள் பெருவெற்றி பெறுவதையும் நல்ல நாடகங்கள் கவனிக்கப்படாமல் போவதையும் கண்கூடாகக் கண்டும், நல்ல நாடகங்களும் பெரிய வெற்றியைப் பெறும் என்கிற நம்பிக்கையுடன் பிடிவாதமாக நல்ல நாடகங்களையே நடத்திக்கொண்டிருக்கும் ஞாநியை மனம் நிறைந்து பாராட்டுவோம். அவரது கனவு மெய்யப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.