தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தொழிற்சாலைகள் கூடுதல் மின்சாரத்துக்கு கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2 உயர்வு: 2 நாளில் ஏற்க நிர்பந்தம்

சென்னை, மே 18: உயர் அழுத்த மின்சாரம் உபயோகிக்கும் தொழிற்சாலைகளுக்கு கூடுதல் மின்சாரத்துக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொண்டு, எவ்வளவு கூடுதல் மின்சாரம் தேவை என்பது கு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:23 pm

மு.சந்திரசேகரன்

சென்னை, மே 18: உயர் அழுத்த மின்சாரம் உபயோகிக்கும் தொழிற்சாலைகளுக்கு கூடுதல் மின்சாரத்துக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொண்டு, எவ்வளவு கூடுதல் மின்சாரம் தேவை என்பது குறித்து இரண்டு நாள்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆலை நிர்வாகங்கள் மீது நிர்பந்தம் செலுத்தப்படுகிறது.

உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் ஆலைகள் மாலையில் மின்தேவை அதிகம் உள்ள நேரத்தில் மின் வாரியத்தின் இணைப்பில் இருந்து மின்சாரம் எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மின்சாரம் தேவையானால் யூனிட்டுக்கு ரூ.7 என்ற கட்டண அடிப்படையில் பெறலாம். அதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது.

இத் திட்டத்தில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் சப்ளை செய்ய உத்தேசிக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. கூடுதலாக 20 ஆயிரம் யூனிட் தேவை என்று அனுமதி பெற்றால், அந்த அளவுக்குப் பயன்படுத்தாமல் கூடுதலாக 10 ஆயிரம் யூனிட் மட்டுமே பயன்படுத்தினாலும், 20 ஆயிரம் யூனிட்டுகளுக்கு ரூ.7 என்ற அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என ஆலை நிர்வாகத்தினர் கூறுகின்றனர். ஏற்கெனவே பயன்படுத்தும் அளவீட்டில் இந்த 10 ஆயிரம் யூனிட்டுகளைக் கழித்துக் கொண்டு, மீதி யூனிட்டுகளுக்கு பழைய அடிப்படையில் கட்டணம் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஜனவரி மாதம் முழுவதற்கும் கூடுதல் யூனிட்டுகளுக்கு கணக்கிட்டு பணம் வசூலித்துவிட்டனர். ஆனால் 18-ம் தேதியில் இருந்துதான் திட்டமே தொடங்கியது. மின்சாரம் தராத 17 நாள்களுக்கும் சேர்த்து செலுத்திய தொகை இன்னும் திருப்பித் தரப்படவில்லை.

மின் கட்டணம் செலுத்த ஒரு நாள் தாமதம் ஆனாலும் அபராதம் செலுத்தியாக வேண்டும். ஆனால் கூடுதலாகப் பெற்ற பணத்தை 4 மாதங்களாக திருப்பித் தராமல் இருப்பது குறித்து மின்வாரியத்திடம் யாரும் கேள்வி கேட்க முடியவில்லை. இடையில் திடீரென மின்சாரம் ஒரு நாளுக்கு நிறுத்தப்படுவது உண்டு. அதையும் முன்கூட்டியே தெரிவிப்பதில்லை என்று ஆலை நிர்வாகத்தினர் கூறுகின்றனர். குறைந்தபட்சம் 2 நாள்களுக்கு முன்பு தகவல் தெரிவித்தால்தான், தொழிலாளர்கள் வருகையை அதற்கேற்ப மாற்றிக் கொள்ள முடியும் என்கின்றனர்.

முந்தைய மாதங்களின் பயன்பாட்டில் 80 சதவீதத்தை மட்டுமே ஆலைகள் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடும், இப்போது 70 சதவீதம் என குறைக்கப்பட்டுவிட்டது. எனவே கூடுதல் மின்சாரத் தேவை அளவு அதிகமாகியுள்ளது.

இப்போது ஜூன் 2010-ல் இருந்து மே 2011 வரையிலான காலத்துக்கு கூடுதலாக தேவைப்படும் அளவை குறிப்பிட்டு ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும் என கடந்த வாரம் ஆலை நிர்வாகங்களுக்கு மின்வாரியம் தெரிவித்தது. சனிக்கிழமை இரவு தகவல் கூறி, திங்கள்கிழமை காலைக்குள் ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும் என வாய்மொழியாக அதிகாரிகள் கூறியுள்ளனர். உரிமையாளர் ஊரில் இல்லாவிட்டால் என்ன செய்ய முடியும் என்று தெரியாமல் நிர்வாகங்கள் சிரமப்பட்டன.

 இந்தக் கூடுதல் கட்டணத்துக்கு யூனிட்டுக்கு ரூ.7 என்ற கட்டணம் ரூ.9 என உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் மின்வாரியத்துக்கு மாதத்துக்கு ரூ.200 கோடி வரை கூடுதலாக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

மாதந்தோறும் கூடுதலாகத் தேவைப்படும் மின்சார அளவைக் குறிப்பிட்டு இப்போது ஒப்பந்தம் செய்துவிட்டு, பிறகு உற்பத்தியைக் குறைக்க நேர்ந்தால், தேவையில்லாமல் கூடுதல் மின்கட்டணத்தை கட்ட வேண்டியிருக்கும். எனவே கூடுதல் தேவையை மாதந்தோறும் மாற்றி அமைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்கின்றனர் ஆலை நிர்வாகத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.