வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வறண்டது கருணை ஆறு: குடிநீர் கிடைக்காமல் 20 கிராம மக்கள் தவிப்பு

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் கருணை ஆறு வறண்டதால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.    ம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:42 pm

ஷேக் அப்துல்காதர்

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் கருணை ஆறு வறண்டதால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

   மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆழ்வார்குறிச்சி அருகே கடனாநதி அணைக் கட்டப்பட்டுள்ளது. 85 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை தென்மேற்கு பருவக் காற்று, வடகிழக்கு பருவக் காற்று பருவங்களிலும் நிரம்பும். கடனாநதி அணையின் மூலம் சுமார் 10,000  ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.

   மேலும் கருணை ஆற்றில் சிவசைலம், மேலஆம்பூர், கீழஆம்பூர், காக்கநல்லூர், வாகைகுளம், மன்னார்கோவில், பிரம்மதேசம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உறைகிணறுகள் அமைத்து குடிநீர் திட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

   கருணை ஆற்றில் பெருமளவில் அனுமதியின்றி மணல் எடுக்கப்பட்டதால் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன. மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது இவை சேதமடைந்து குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது.

   ஊரெங்கும் மழை பெய்தாலும் கருணை ஆற்றின் கரையில் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் கடனாநதி அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் அணை மூடப்படுகிறது. இதனால் கருணை ஆறு வறண்டு விடுகிறது. இதனால் நீர் ஆதாரம் கிடைக்காமல் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது.

  கடனாநதி அணையில் 15 அடி வரை சேறு போக நீர் இருப்பு குறைவாக இருப்பதால் அணை மூடப்பட்டது. இதனால் ஆறு வறண்டநிலையில் உள்ளது.

  இதன் காரணமாக ஆற்றங்கரையில் உள்ள மன்னார்கோவில், பிரம்மதேசம், வாகைகுளம் ஊராட்சிக்குள்பட்ட 20 - க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு கடந்த சில தினங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

  இதனால் கிராம மக்கள் வேறு வழியின்றி கிணற்று நீரைப் பயன்படுத்தி வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தீர்வு என்ன?

குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்படும் கிராம மக்களுக்கு தாமிரபரணி ஆற்று நீரை வழங்கும் வகையில், கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

  நிரந்தரத் தீர்வாக, ஆற்றின் நீர்வளத்தைப் பேண, மணல் திருட்டைத் தடுக்க தீவிர நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். சேதமடைந்துள்ள குடிநீர் உறைக் கிணறுகளை மழை வெள்ளம் வரும் முன் சீரமைக்க வேண்டும் என்று இப் பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.