திருவாரூர்: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தென்னை மர காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தி, அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
பெற்ற பிள்ளை காப்பாற்றாவிட்டாலும், நாம் வைத்த தென்னங்கன்று (தென்னம்பிள்ளை) நம்மை காப்பாற்றும் என்பார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த தென்னை சாகுபடியை ஏராளமான விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போதிய நீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ள நெல் சாகுபடியை ஈடுகட்டும் வகையில், தற்போது விவசாய நிலங்களில்கூட தென்னை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் பொள்ளாச்சி, தேனி, கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தென்னை மர காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. ஆனால், தென்னை சாகுபடி அதிகரித்து வரும் பிற மாவட்டங்களுக்கும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, ஒவ்வொரு மரத்துக்கும் காப்பீடு மற்றும் இழப்பீட்டை அமலாக்க வேண்டும்.
15 வயது வரை உள்ள மரங்களுக்கு ரூ.1,500-ம், அதற்கு மேல் வயதுள்ள மரங்களுக்கு ரூ.2,000 என இழப்பீட்டை உயர்த்த வேண்டும். இழப்பீட்டில் விவசாயிகளின் பங்காக 20 சதம் பிடித்தம் செய்வதை ரத்து செய்து, முழுத் தொகையையும் வழங்க வேண்டும் என்கின்றனர் தென்னை விவசாயிகள்.
இதுகுறித்து தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் பி.எஸ். மாசிலாமணி கூறியது:
தற்போது தென்னை சாகுபடியில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, தென்னை சார்ந்த துணைப் பொருள்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் உரிய தொழில்நுட்பம், மானியத்துடன் கடனுதவி, சந்தை வாய்ப்பு ஆகியவற்றை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். மானியமும் அளிக்கவேண்டும்.
மேலும், தமிழக அரசே உரி தேங்காய்களாக நுகர்பொருள் வாணிபக் கழகம், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், டான்பெட் ஆகியவற்றின் மூலம் கிலோ ரூ.17-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். அதுவரை கொப்பரைத் தேங்காயை கிலோ ரூ.55-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.
தென்னை விவசாயிகள் நேரடியாகச் சென்று விற்பனை செய்யும் வகையில், கொப்பரைக் கொள்முதலில் உள்ள கடும் நிபந்தனைகளைத் தளர்த்தி, எளிய முறையில் கொள்முதல் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், புதிய விவசாயிகள், இதில் ஈடுபடும் வகையிலும் தென்னை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.10,000 கடனுதவியை 4 சத வட்டியில் வழங்க வேண்டும். தென்னையைத் தாக்கி, அதன் காய்ப்புத் திறனுக்கு ஊறு விளைவிக்கும் வண்டுகள் தாக்குதலிலிருந்தும், ரியோபைட் எனப்படும் நோயிலிருந்தும் தென்னை மரங்களைக் காக்க உரிய தொழில்நுட்ப உதவியோடு, உரிய மருந்துகளும் எளிய முறையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்கின்றனர் தென்னை விவசாயிகள்.
சென்னையில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியக் கிளையை தென்னை அதிகம் விளையும் மாவட்டங்கள் அல்லது தமிழகத்தின் மையப் பகுதியில் அமைக்க வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியத்தின் திட்டங்களை தென்னை விளையும் அனைத்துப் பகுதிகளுக்கும் அமல்படுத்த வேண்டும் என்பதே தென்னை விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!

இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்

களைகட்டிய புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு!

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


