பொன்னேரி, செப். 6: பொன்னேரி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை சுற்றிலும் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் புதர்களில் குடியிருந்து வரும் பாம்புகள் அங்குள்ளவர்களை படையெடுத்து பாடாய் படுத்தி வருகிறது.
÷திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரியை அடுத்துள்ள வேண்பாக்கம் பகுதியில் பொன்னேரி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
÷பஞ்செட்டி பிரதான மின் நிலையத்தில் இருந்து மின்சாரத்தைப் பெற்று இப்பகுதியில் விநியோகம் செய்யும் பொன்னேரி துணை மின்நிலையம், பொன்னேரி மற்றும் அதைச் சுற்றிலும் வசிக்கும் பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கான தனித்தனி அலுவலகங்கள் ஆகியனவும், இங்கு தங்கி பணிபுரியும் அலுவலர்களுக்கான இரண்டு குடியிருப்புகளும் இந்த அலுவலகத்தை ஒட்டி அமைந்துள்ளன.
செயற்பொறியாளர் அலுவலகத்தின் வலது புறம் மற்றும் பின்புறம் முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது.
÷அத்துடன் அங்குள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றின் உள்ளேயும் அதன் அருகில் உள்ள புதர்களில் பாம்புகள் உள்ளதாகவும் அங்குள்ள பாம்புகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு படையெடுப்பதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கின்றனர்.
÷அத்துடன் செயற்பொறியாளர் அலுவலகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் ஏதும் இல்லாததால் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் எந்நேரமும் அங்கு உலா வருகின்றன.
÷எனவே மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை சுற்றிலும் புதர்கள் மண்டி அவை பாம்புகளின் இருப்பிடமாய் மாறி வருவதைத் தடுக்க அங்குள்ள புதர்களை அகற்றவும் பயன்பாடின்றி இருக்கும் கட்டடங்களை இடிக்கவும் அத்துடன் புதர்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க மின்வாரிய அலுவலகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்ப மின்வாரிய உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மின் நுகர்வோர்களின் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


