ஓராண்டாகியும் சீரமைக்கப்படாத மலைப்பட்டு பாலம்
ஸ்ரீபெரும்புதூர், ஏப்.25: காஞ்சிபுரம் மாவட்டம், முடிச்சூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மலைப்பட்டு பகுதியில் உள்ள பழமையான பாலம் இடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந


ஸ்ரீபெரும்புதூர், ஏப்.25: காஞ்சிபுரம் மாவட்டம், முடிச்சூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மலைப்பட்டு பகுதியில் உள்ள பழமையான பாலம் இடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
÷வண்டலூர் வாலாஜாபாத் சாலையையும், ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் சாலையையும் இணைக்கும் சாலை முடிச்சூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலை. இச்சாலையை பயன்படுத்திதான் காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கும், அதேபோல் தாம்பரம் பகுதியில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கும் சென்று வருகின்றன.
÷இச்சாலை குண்டும் குழியுமாக மாறியதைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு நாவலூர் பகுதியில் இருந்து சேத்துப்பட்டு பகுதி வரை ரூ.3.45 கோடி மதிப்பிலும், சேத்துப்பட்டு பகுதியில் இருந்து கரசங்கால் பகுதி வரை ரூ. 4.2 கோடி மதிப்பிலும் ஒரு வழிச்சாலையில் இருந்து இரண்டு வழிச்சாலையாக அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டது. ÷ஆனால் சாலை சீரமைக்கப்பட்டபோது மலைப்பட்டு பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான பாலத்தை நிதி குறைவாக உள்ளதாகக் கூறி புதிதாக கட்டாமல் பாலத்தை தாற்காலிகமாக சீரமைத்து சென்று விட்டனர் நெடுஞ்சாலைத் துறையினர்.
÷இந்நிலையில் சாலை சீரமைக்கப்பட்டவுடன் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் அதிகளவில் இச்சாலையில் செல்ல ஆரம்பித்தன. இதன் காரணமாக மலைப்பட்டு பகுதியில் உள்ள இந்த பழமையான பாலம் வலுவிழந்து விரிசல் விழுந்ததுடன் ஓராண்டுக்கு முன்பு பாலத்தின் மையப் பகுதி இடிந்து விழுந்து விட்டது. ÷இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தின் அருகிலேயே மாற்றுப் பாதை அமைத்து வாகனங்கள் சென்று வர ஏற்பாடு செய்தனர்.
÷இந்நிலையில் இந்தப் பாலத்தை நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சத்தில் கட்ட நெடுஞ்சாலைத் துறை முடிவெடித்து அதன்படி டெண்டரும் விடப்பட்டுள்ளது. அதற்காக இந்தப் பாலத்தின் அருகே நெடுஞ்சாலைத் துறையினர் பாலம் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.95 லட்சத்தில் கட்டப்படுவதாகவும், பாலம் கட்டும் பணி கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கப்பட்டதாகவும், கட்டுமான பணி வரும் நவம்பர் 22-ம் தேதி முடிவடையும் என்றும் ஒப்பந்தம் எடுத்தவரின் பெயரையும் குறிப்பிட்டு பேனர் வைத்துள்ளனர்.
÷ஆனால் பேனரில் குறிப்பிட்டுள்ளபடி பாலம் கட்டும் பணி இன்று வரை தொடங்கப்படவில்லை. எப்போதும் போலவே வாகனங்கள் மாற்றுப்பாதையிலே சென்று வருகின்றன. எனவே வரும் மழைக் காலத்துக்குள்ளாவது இந்தப் பாலத்தைக் கட்ட உடனடியாக நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வேலையை தொடங்காத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இச்சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளும், இப்பகுதி மக்களும் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...