சென்னை, பிப். 16: பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரைப்படி முன் அனுபவம், அரசு பணி அனுபவத்துடன் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேந்தெடுக்கப்பட்டு பணியாற்றிவரும் கல்லூரி ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.
தமிழகத்தில் 63 அரசுக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் 2007, 2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள்.
முதுகலை படிப்புடன் எம்.ஃபில். கல்வித் தகுதி, தனியார் கல்லூரிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளிட்ட அடிப்படையில் இவர்கள் தேந்தெடுக்கப்பட்டனர்.
இவ்வாறு புதிதாகப் பணியில் சேர்ந்தவர்கள் அனைவரும், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரைப்படி அரசு பணியில் சேர்வதற்கு முன்பு, இணைப்புக் கல்லூரிகளில் பணிபுரிந்த அனுபவங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். அதனடிப்படையில் பதவி உயர்வு அளிக்கவேண்டும் என கோரி வருகின்றனர்.
ஆனால் தமிழக அரசு யுஜிசி பரிந்துரையை நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. இதுபோன்ற காரணங்களால் அதிருப்தியடைந்துள்ள இவர்கள், புதிய சங்கம் ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த அரசுக் கல்லூரி பேராசிரியர் மு. ரவிச்சந்திரன் கூறியது:
இணைப்புக் கல்லூரிகளில் மட்டுமல்லாமல், மத்திய அறிவியல் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட அரசு மையங்களில் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றியிருந்தால்கூட அதையும் கணக்கில் கொண்டு, பதவி உயர்வும், ஊதிய உயர்வும் அளிக்கப்படவேண்டும் என்று யுஜிசி கூறுகிறது.
1990-ம் ஆண்டுகளுக்கு முன்பு தாற்காலிக "10ஏ (1)' அடிப்படையில் சேர்ந்து, பின்னர் பணி நிரந்தரம் பெற்றவர்களுக்கும் இதுபோல்தான் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால், புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தமிழக அரசு பாகுபாடு காட்டுகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் 10 முதல் 15 ஆண்டுகள் வரை இணைப்புக் கல்லூரிகளில் பணியாற்றிய அனுபவத்தை பெற்றுள்ளனர். எனவே, இவர்களின் அனுபவங்கள் கணக்கில் கொள்ளப்பட்டால், இவர்களுக்கு முன்னர் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வருபவர்களைக் காட்டிலும் அனைத்து விதத்திலும் விஞ்சிவிடுவர்.
இதனால் இவர்களின் கோரிக்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படாமலேயே முடக்கப்படுகிறது. புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களில் பலர் 50 வயதைத் தாண்டியவர்கள். குறுகிய காலத்தில் ஓய்வு பெற்றுவிடுவர். எனவே, இவர்களுக்கு வழி விடுவதில் தவறில்லை.
அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, தமிழக அரசுக்கு தனியாகப் பாராட்டு விழா நடத்தவும் புதிய பேராசிரியர்கள் திட்டமிட்டுள்ளதாகவும், இதில் பங்கேற்க முக்கிய அரசியல் தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.
தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காகவே அரசியல் தலைவர்கள் இதுபோன்ற ஆதரவை அளிப்பர், எனவே ஆசிரியர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

சொல்லப் போனால்... பெட்டிக்குள் உறங்கும் பூதம்!
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

