அடிப்படை வசதிக்கு ஏங்கும் கிராமம்!
திருத்தணி, பிப். 19: திருத்தணி ஒன்றியம் முருகம்பட்டு ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ÷திருத்தணி ஒன்றியம் முருகம்பட்டு ஊராட்சிக்


திருத்தணி, பிப். 19: திருத்தணி ஒன்றியம் முருகம்பட்டு ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
÷திருத்தணி ஒன்றியம் முருகம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்டது கிழக்கு முருகம்பட்டு கிராமம். இக்கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கட்டட வேலையும், விவசாயக் கூலி வேலையும் செய்து வருகின்றனர்.
இக்கிராமத்தில் உள்ள தெருவில்
ரூ. 1 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெருவில் 5 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது.
÷பள்ளம் தோண்டி 6 மாதத்துக்கு மேலாகியும் கால்வாய் கட்டப்படாததால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஆபத்தான நிலையில் கழிவுநீர் கால்வாயை கடக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் குழந்தைகள் கால்வாயை கடக்க முடியாமல் தவறி பள்ளத்தில் விழுந்து படுகாயம் ஏற்பட்டுள்ளது.
÷இக்கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு திருத்தணி நகருக்கு பஸ்கள் மூலம் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் பஸ்ஸில் பயணம் செய்வதற்காக கிராமத்திலிருந்து 2 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையால் தற்போது இருக்கும் சாலை குண்டும், குழியுமாக மாறி இருப்பதால் மாணவர்கள் மற்றும் வயதானோர் சாலையில் நடக்க முடியமால் கடும் அவதிப்படுகின்றனர்.
÷மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர்.
10 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த பட்டாக்கள்
÷கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இக்கிராமத்தில் வசிக்கும் 55 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரையில் நிலத்தை சர்வே செய்து பிரித்து அளந்து கொடுக்காததால் பலர் வீடுகளின்றி தவித்து வருகின்றனர்.
÷இது குறித்து பல முறை தொகுதி சட்டமன்ற உறுப்பனரிடம், மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
÷இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:
÷"எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருகிறோம். குறிப்பாக வீட்டுமனை பட்டா கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுநாள் வரையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சர்வே செய்து நிலத்தை பிரித்து கொடுக்கவில்லை.
÷இதனால் சிலர் வீடுகளின்றியும் மண் குடிசைகளில் வசதித்து வருகின்றனர். இது குறித்து பள்ளிப்பட்டு சட்டமன்ற உறுப்பினரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனுகொடுத்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
÷அதேபோல் மாணவர்கள் திருத்தணியில் பள்ளிகளுக்கு செல்ல சரியான பஸ் வசதி கிடையாது. எங்கள் கிராமம் வழியாக செல்லும் மினிபஸ்úஸô சரியாக வருவது கிடையாது. ÷இதனால் 2 கி.மீ. நடந்து சென்று திருத்தணி- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பஸ்கள் ஏதேனும் நின்றால் மட்டுமே மாணவர்கள் திருத்தணிக்கு செல்ல முடியும்.
÷இல்லையெனில் வீட்டுக்கு திரும்பி விடும் நிலை ஏற்படும்' என்று அப்பகுதி மக்கள் கூறினர்.
÷எனவே கிழக்கு முருகம்பட்டு கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தற்போது இருக்கும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...