மேலும் 500 நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ. 1,000

சென்னை, ஜன. 8: நலிந்த கலைஞர்களாக உள்ள மேலும் 500 பேருக்கு மாதம் ரூ. 1,000 நிதியுதவி அளித்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட உத்தரவு:  நலிந்த கலைஞர்களுக்கா
Updated on
1 min read

சென்னை, ஜன. 8: நலிந்த கலைஞர்களாக உள்ள மேலும் 500 பேருக்கு மாதம் ரூ. 1,000 நிதியுதவி அளித்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

 இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட உத்தரவு:

 நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், மொத்தம் 7 ஆயிரத்து 391 பேருக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2010-2011-ம் ஆண்டுக்கான சுற்றுலா, பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, நடப்பாண்டில் 500 நலிந்த கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

 அந்த அறிவிப்பின்படி, புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 500 நலிந்த கலைஞர்களின் பெயர்ப் பட்டியலுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 500 நலிந்த கலைஞர்களையும் சேர்த்து, இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 7 ஆயிரத்து 891 பேர் பயன் அடைவர் என முதல்வர் கருணாநிதி வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com