அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

காரனோடையில் பஸ் நிலையம் அமைக்கப்படுமா?

பொன்னேரி, ஜூலை 18: சோழவரம் ஒன்றியத்தில் உள்ள காரனோடை பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பொன்னேரி தாலுகா சோழவரம் ஒன்றியத்தில் உள்ள காரனோடையை சுற்றி ஆத்தூ

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:13 pm

எம்.சுந்தரமூா்த்தி

பொன்னேரி, ஜூலை 18: சோழவரம் ஒன்றியத்தில் உள்ள காரனோடை பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 பொன்னேரி தாலுகா சோழவரம் ஒன்றியத்தில் உள்ள காரனோடையை சுற்றி ஆத்தூர், சோத்துப்பெரும்பேடு, புதிய எருமைவெட்டிபாளையம், பழைய எருமை வெட்டி பாளையம், செக்கஞ்சேரி, நெற்குன்றம், கம்மார்பாளையம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.

 இக்கிராமங்களில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க காரனோடைக்கு வந்து செல்ல வேண்டும். அதே போன்று இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்கு பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சென்னை, செங்குன்றம், கோயம்பேடு, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, ஆரம்பாக்கம், எளாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல காரனோடை வந்து தான் செல்ல வேண்டும்.

 சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் வள்ளலார் நகர், செங்குன்றம், மாதவரம், பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட மாநகர பஸ்கள் காரனோடை பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதே போன்று பொன்னேரியில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து காரனோடை வழித்தடத்தில் செங்குன்றத்துக்கு நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

 காரனோடை பகுதியில் நின்று பொதுமக்களை எற்றிச்செல்ல அங்கு பஸ் நிலையம் இல்லாததால் காரனோடைக்கு வரும் அனைத்து பஸ்களும் சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக காரனோடையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் பஜார் சாலையில் நின்று பஸ் ஏறி சென்று வருகின்றனர்.

 எனவே காரனோடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் நலன் கருதி காரனோடையில் பஸ் நிலையம் அமைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிர் பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.