சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

அரசு இணையதளம், ரேஷன் பாக்கெட்டுகளில் முதல்வர், அமைச்சர்கள் படங்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி

சென்னை, மார்ச் 2: அரசு இணையதளம், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சிறப்பு பொது விநியோகத் திட்ட பாக்கெட்டுகளில் முதல்வர், அமைச்சர்களின் படங்களை நீக்க உத்தரவிடப்பட்டு ள்ளது. தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:55 am

கே.பாலசுப்பிரமணியன்

சென்னை, மார்ச் 2: அரசு இணையதளம், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சிறப்பு பொது விநியோகத் திட்ட பாக்கெட்டுகளில் முதல்வர், அமைச்சர்களின் படங்களை நீக்க உத்தரவிடப்பட்டு ள்ளது. தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

தமிழக அரசின் உணவுத் துறை மூலமாக  ரவை, மைதா, பாமாயில், ரூ.50-க்கு 10 மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த பாக்கெட்டுகளில் முதல்வர் கருணாநிதியின் படம் இடம்பெற்றுள்ளது.

தேர்தல் நடத்தை நெறிமுறை: தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நடத்தை நெறிமுறைகள் மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் பிடி ஒவ்வொரு விஷயத்திலும் இறுகி வருகிறது. அதன் ஒருபகுதியாக, சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் ரேஷன் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள முதல்வர் கருணாநிதியின் உருவப் படத்தை மறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து உணவுப் பொருள் வழங்கல் துறையின் உதவி  ஆணையாளர் அலுவலங்களுக்கும், மாவட்டங்களில் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கும் இதுகுறித்த உத்தரவை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

இந்த உத்தரவு குறித்து, உணவுப் பொருள் வழங்கல் துறையின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ""தேர்தல் நடத்தை நெறிமுறைகள் காரணமாக ரேஷன் பாக்கெட்டுகளில்  உள்ள முதல்வர் கருணாநிதியின் படத்தை மறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான  ஸ்டிக்கர்கள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விநியோகிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

  அரசு இணையதளத்திலும்...தமிழக அரசின் இணையதளத்திலும் (ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்), முதல்வர் கருணாநிதி, அமைச்சர்களின் விவரங்களை பார்க்க முடியவில்லை.

 இதுகுறித்து, அரசு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "ஆளுநர், முதல்வர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் தமிழக அரசின் இணையதளத்தில் இருக்கும். ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் முதல்வர், அமைச்சர்களைப் பற்றிய குறிப்புகளுக்குச் செல்ல முடியாதபடி அவற்றின் இணைப்பு (லிங்க்) துண்டிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர்.

  அடுத்து வரும் நாட்களில், சுவர் விளம்பரம் உட்பட அனைத்து வகையான தேர்தல் பிரசாரங்களிலும் தேர்தல் ஆணையம் கடுமை காட்டும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.