ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

நெற்பயிருக்கு உரமிடுவதற்கு முன்பாக பச்சை அட்டையை பயன்படுத்துங்கள்

செய்யாறு: நெல்லுக்கு தேவைப்படும் தழைச்சத்து பற்றாக்குறையைக் கண்டறியும் பச்சை அட்டையைப் பயன்படுத்தி உரமிடுவதன் மூலம் செலவை குறைக்கலாம் என செய்யாறு கோட்ட வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி தெரிவித்துள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:02 am

தே.சாலமன்

செய்யாறு: நெல்லுக்கு தேவைப்படும் தழைச்சத்து பற்றாக்குறையைக் கண்டறியும் பச்சை அட்டையைப் பயன்படுத்தி உரமிடுவதன் மூலம் செலவை குறைக்கலாம் என செய்யாறு கோட்ட வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி தெரிவித்துள்ளார்.

 இந்த அட்டையில் வெளிர் பச்சை முதல் கரும்பச்சை வரையிலான 1 லிருந்து 6 வரை வெவ்வேறு வகையிலான வில்லைகள் உள்ளன. இந்த பச்சை நிறத்துடன் இலையின் வண்ணம் ஒப்பிடப்படுகிறது.

 குறிப்பிட்ட பச்சை நிறத்துக்குக் கீழே இருக்குமானால் தழைச்சத்து பற்றாக்குறையினால் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதை அறியலாம். அதற்கு ஏற்ப தழைச்சத்தை இட வேண்டும். தழைச்சத்து நன்கு கிடைக்கும் போது பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் குறையும். பயிர் சாயாது. மகசூல் அதிகரிக்கும்.

 பயன்படுத்தும் முறை:

 நட்ட 15-ம் நாள் முதல் (நேரடி விதைப்பு என்றால் 21-ம் நாள் முதல்) கதிர் வெளிவரும் பருவம் வரை வாரம் ஒருமுறை பச்சை வண்ண அட்டைகளைப் பயன்படுத்த வேண்டும்.

 சீரான பயிர் எண்ணிக்கையுள்ள வயலில் நோய் தாக்காத பத்து நெற்பயிரை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர்வு செய்து, ஒவ்வொரு பயிரிலும் மிக உயரமான நன்கு விரிந்த இலை ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். (பொதுவாக மேலிருந்து மூன்றாவது இலை).

 வெள்ளைப் பொன்னிக்கு பச்சை வண்ண அட்டையிலுள்ள 3-ம் எண்ணுடனும், மற்ற ரகங்களுக்கு 4-ம் எண்ணுடனும் ஒப்பிட வேண்டும். தேர்ந்தெடுத்த இலையின் நடுப்பகுதியை கிள்ளாமல் பச்சை வண்ண அட்டையின் நிறங்களுடன் ஒப்பிட வேண்டும்.

 இலையின் நிறம் இரண்டு நிறத்திற்கு இடையில் இருந்தால் இரண்டுக்கும் இடைப்பட்ட சராசரி மதிப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் (அதாவது 3.5 அல்லது 4.5).

 இவ்வாறு மொத்தம் பத்து இலைகளில் ஒப்பிடுகையில் அதில் 5 முதல் 6 வரை இலைகளின் பச்சை நிறம் குறிப்பிட்ட பச்சை நிறத்திற்கு குறைவாக இருந்தால் எக்டருக்கு 35 கிலோ தழைச்சத்து இட வேண்டும் (பனி மற்றும் மழைக்காலத்தில் 30 கிலோ).

 இலைகளின் நிறம் குறிப்பிட்ட பச்சை நிறத்துக்கும் அதிகமாக இருந்தால் தழைச்சத்து இடத் தேவையில்லை.

 கவனிக்க வேண்டியவை

 1. வண்ண அட்டையை பயன்படுத்தும் சமயம் சூரிய ஒளி இலையின் மேல் படாமல் உடல் நிழலைக் கொண்டு மறைத்துக் கொள்ள வேண்டும்.

 2. காலை 8-10 மணி வரை அல்லது மாலை 3-5 மணி வரை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இலையின் பச்சை நிறத்தை ஒப்புமை செய்ய வேண்டும்.

 3. ஒரே நபர் இந்த அளவை எடுப்பது சிறந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.