எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காவிரி, பவானியில் கொள்ளைபோகும் மணல்

ஈரோடு: அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றில் மணல் அள்ளப்பட்டு வருவதைப்போல், பவானி ஆற்றிலும் மணல் அள்ளும் முயற்சி நடக்கிறது.  பவானிசாகர் அணையில் இருந்து காவிரியில் சங்கமிக்கும் கூடுதுறை வரை 100 கிமீ பயணிக்கிற

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:37 pm

ஈரோடு: அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றில் மணல் அள்ளப்பட்டு வருவதைப்போல், பவானி ஆற்றிலும் மணல் அள்ளும் முயற்சி நடக்கிறது.

 பவானிசாகர் அணையில் இருந்து காவிரியில் சங்கமிக்கும் கூடுதுறை வரை 100 கிமீ பயணிக்கிறது பவானி ஆறு. ஆற்றின் தென்புறம் விவசாய நிலமாகவும், வடபுறம் மலைப் பகுதியாகவும் உள்ளதால், மலைப் பகுதியில் இருந்து நீர் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். இதனால்,ஆற்றில் குறைந்த அளவாவது தண்ணீர் எப்போதுமே ஓடிக்கொண்டிருக்கும்.

 கடந்த திமுக ஆட்சியில் இந்த ஆற்றில் பல்வேறு இடங்களில், அரசு கட்டடப் பணி, கலைஞர் வீட்டுவசதி திட்டப்பணி என பல்வேறு காரணங்களைக் கூறி மணல் கொள்ளை தொடர்ந்தது.

 இந்த ஆற்றிலிருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி அரங்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், பவானி ஆற்றில் மணல் எடுப்பதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். தற்போது, அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் திமுகவினர் பணியை அதிமுகவினர் தொடருவதாகக் கூறப்படுகிறது.

 இதுகுறித்து ஆட்சியர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு எந்த திட்டமும் இல்லை, என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இருப்பினும், மணல் எடுப்பதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் முறையிட்டனர்.

 இரவு, பகலாக அள்ளுகின்றனர்:

 காவிரியில் கரூர் மாவட்டம் மாயனூரில் தான் அரசு அனுமதியுடன் மணல் அள்ளும் இடம் தொடங்குகிறது. ஆனால், இப்போது கடந்த 2 மாதங்களாக ஈரோடு மாவட்டத்தில், வெங்கம்பூர் ரயில்வே கேட் அருகே காவிரியில் அனுமதியே இல்லாமல் இரவு பகலாக மணல் அள்ளப்பட்டு வருகிறது.

 இங்கு மணல் அள்ள அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் மணல் அள்ளப்படுகிறது. தினமும் இரவு, பகலாக சுமார் 50 லாரிகளில் மணல் கொள்ளைபோவதாகத் தெரிகிறது. அதே நடைமுறையை பயன்படுத்தி பவானி ஆற்றிலும் மணல் கொள்ளை முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. பவானி ஆறு செங்குத்தாகப் பாயும் ஆறு, இதன் அகலமும் குறைவு, இங்கு பெரிய அளவில் மணல் சேர வாய்ப்பில்லை. சேரும் இடங்களில் மணலை அள்ளிவிட்டால் காங்கீரீட் தரையில் ஓடும் தண்ணீரைப்போல ஆறு மாறிவிடும். மேலும் ஆற்றில் உள்ள 10க்கும் மேற்பட்ட கூட்டுக்குடிநீர்த் திட்டங்களுக்கும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும்.

 இதுபோல் காவிரியும் மேட்டூரிலிருந்து கொடுமுடி வரை செங்குந்தாகப் பாய்ந்து அதன்பிறகே சமவெளிப் பகுதியில் ஓடுகிறது. இதனால் கொடுமுடி வரை ஆற்றில் பெரிய அளவில் மணல் இருக்காது. கொடுமுடி அருகில்தான் மணல் சேருகிறது. இந்தப் பகுதியில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

 காவிரி மற்றும் பவானி ஆறுகளில் மணல் கொள்ளையைத் தடுத்து இந்த ஆறுகளை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.