டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

வெள்ளப் பாதிப்பை தவிர்க்க நிரந்தர நடவடிக்கை தேவை: கடைமடை விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருதுறைப்பூண்டி: ஆண்டுதோறும் வெள்ளதால் பாதிக்கப்படும் காவிரி கடைமடை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், தனி வடிகால் கோட்டம் அமைது உபரி வெள்ள நீர் முறையாக கடலில் கலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:43 pm

ஏ. ரவி

திருதுறைப்பூண்டி: ஆண்டுதோறும் வெள்ளதால் பாதிக்கப்படும் காவிரி கடைமடை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், தனி வடிகால் கோட்டம் அமைது உபரி வெள்ள நீர் முறையாக கடலில் கலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

 காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நெல் சாகுபடியே பிரதானம். பணப் பயிர் சாகுபடியோ, தொழிற்சாலைகளோ பெருமளவில் கிடையாது.

 இந்த மாவட்டங்களில் ரு சில இடங்களில் உள்ள நிலதடி நீரையும், பருவ மழையையும், பிரதானமாக மேட்டூர் அணை தண்ணீரையும் நம்பியே விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 நாகை மாவட்டம், கொள்ளிடதில் இருந்து தஞ்சை மாவட்டம் சேதுபாவாசதிரம் வரை கடற்கரையோரமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் சதுப்புநில பகுதிகள் இருந்தன. இதன் மூலம் வெள்ளநீர் பரவலாகி கடலில் வெள்ளநீர் வடிந்து வந்தது. இதனால், கடைமடை பகுதி விவசாயிகளுக்கு வெள்ள அபாயம் இல்லாமல் இருந்தது.

 வெள்ளம் வர காரணம்: இந்நிலையில், கடைமடைப் பகுதியில் உள்ள முகதுவாரப் பகுதிகள் தூர்ந்தது, பாசன, வடிகால் ஆறுகளின் படுகைகள் தூர்ந்து சாகுபடி நிலமாகவும், செங்கல் காளவாய் அமைக்கப்பட்டதாலும், ஆற்றின் கரைகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டதாலும், சதுப்பு நிலப் பகுதிகளில் கடல்சார்ந்த தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டதாலும் கோடைகாலதில் கடும் வறட்சியும், மழை காலதில் பெரும் வெள்ளச் சேதமும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. வெள்ளதின் காரணமாக, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் சாகுபடி பாதிக்கப்படுகிறது.

 கடைமடைப் பகுதியில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் அதிகாரிகள் சம்பவ இடதைப் பார்வையிட்டு, இனிவரும் காலங்களில் வெள்ளம் ஏற்படாத வகையில் நிரந்தர திட்டம் தீட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிடுவது ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் சம்பிரதாய நடவடிக்கையாகவே தொடர்கிறது. ஆனாலும், பிரச்னைதான் தீர்ந்தபாடில்லை.

 என்ன செய்யலாம்: வெள்ளம் ஏற்படும் காலங்களில் தாற்காலிக நிவாரணங்களுக்காக பல கோடிகளை செலவிடும் அரசு, வெள்ளப் பாதிப்பை தவிர்க்க நிரந்தர செயல்திட்டதை அறிவிது, செயல்படுத வேண்டும்.

 மேலும், காவிரி டெல்டா பகுதிகளில் இருந்து செல்லும் ஆற்றுநீர் கடலில் கலக்கும் பிரதான வடிகால் ஆறுகளான முள்ளியாறு, மரைக்கா கோரையாறு, அரிச்சந்திரா நதி, நல்லாறு, அடப்பாறு, மல்லியனாறு, வளவனாறு ஆகியனவற்றின் முகதுவாரப் பகுதிகளை தூர்வாரி முறையாக பராமரிக்க வேண்டும்.

 கடல் முகதுவாரப் பகுதியில் உள்ள மண் மேடுகளை அகற்ற வேண்டும். மேலும், இந்தப் பகுதிகளில் அதிகமாக வளர்ந்துள்ள நீர்வாழ் தாவரங்களான உமரி, ஆகாய தாமரை, துளிரி, பச்சைபாசி போன்றவற்றையும் அகற்ற வேண்டும்.

 ஆற்றின் கரைகளை பாதுகாக்கும் வகையில் நியமிக்கப்பட்ட கரைக் காவலர்கள் பணியிடங்கள் 60 சததுக்கும் மேல் காலியாக உள்ளன. ஆற்றின் கரைகளில் கருவை மரங்கள் படர்ந்து காணப்படுகின்றன.

 இவை அகற்றப்படாததால், முகதுவாரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள பொதுப் பணி துறை அதிகாரிகள் செல்வதில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இந்த கருவை மரங்களை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 மேற்கூறிய காரணங்கள் மீது உரிய நடவடிக்கை எடுது, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலுள்ள கடைமடை பகுதி வடிகால் ஆறுகளை முறையாக பராமரிக்கும் வகையில் பொதுப் பணி துறை சார்பில் கண்காணிப்புப் பொறியாளர் அந்தஸ்தில் தனி வடிகால் கோட்டதை அமைது, வெள்ளப் பாதிப்பிலிருந்து கடைமடை பகுதி விவசாயிகளை காக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.