சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மின் கட்டண உயர்வுக்குக் காரணம் என்ன?

சென்னை, ஜன. 28: மின் கட்டணத்தை 110 சதவீத அளவுக்கு உயர்த்த வேண்டிய கட்டாய நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருப்பதற்கு, கடந்த திமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என மின்வாரிய அதிகாரிகளும், அத்துறை வல்லுநர்க

Updated On :19 செப்டம்பர் 2012, 11:52 pm

சென்னை, ஜன. 28: மின் கட்டணத்தை 110 சதவீத அளவுக்கு உயர்த்த வேண்டிய கட்டாய நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருப்பதற்கு, கடந்த திமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என மின்வாரிய அதிகாரிகளும், அத்துறை வல்லுநர்களும் கூறுகின்றனர்.

மின் கட்டண உயர்வுக்கான பரிந்துரை நடைமுறைக்கு வந்தால், கூடுதல் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 8,200 கோடி மக்கள் மீது திணிக்கப்படும். அதாவது, இதுவரை யூனிட் ஒன்றுக்கு 75 பைசா, 85 பைசா என செலுத்தி வந்த நுகர்வோர் இனிமேல் குறைந்தபட்சம் ரூ. 2 என்ற அளவில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இப்போது 5 படிகளாகப் பிரித்து மின் கட்டணம் அளிவீடு செய்யப்படுகிறது. அது, இனிமேல் 3 படிகளாகக் குறைக்கப்படும். அதோடு தற்போது 600 யூனிட் வரை வழங்கப்படும் மானியம், இனிமேல் 500 யூனிட்களாகக் குறைக்கப்படும்.

இதனால் 600 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்கள் இதுவரை செலுத்தி வந்த ரூ. 1,100 கட்டணத்துக்கு பதில் ரூ. 2,375-க்கு மேல் அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

கட்டண உயர்வு ஏன்?÷கடந்த ஆண்டு நிலவரப்படி மின்வாரியத்துக்கு ரூ. 42 ஆயிரத்து 175 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு, நிகழாண்டில் ரூ. 53 ஆயிரம் கோடியாக உயர உள்ளது. இதுவே மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்குக் காரணம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

உண்மைக் காரணம் என்ன? மானியம் மற்றும் கட்டணங்களை தமிழக அரசு முழுமையாக அளிக்காததே, மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதற்கான முக்கிய காரணம் என்று மின்வாரிய அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.

தமிழக அரசின் கொள்கை முடிவின்படி 19 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கும், 14 லட்சம் குடிசைகளின் மின் இணைப்புகளுக்கும், விசைத்தறி, நெசவு, ஆலயங்கள் ஆகியவற்றின் இணைப்புகளுக்கும் இலவசமாக மின்சாரம் அளிக்கப்படுகிறது.

இந்த இலவசங்களுக்கு ஈடாக 2008-2009 நிதியாண்டில் ரூ. 4,118 கோடியை மானியமாக மின்வாரியத்துக்கு அரசு அளித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு வழங்கியதோ ரூ. 263 கோடி மட்டுமே.

2009-10 நிதியாண்டில் அரசு வழங்கியிருக்க வேண்டிய மானியத் தொகை ரூ. 5,858 கோடி. ஆனால் அரசு வழங்கியதோ ரூ. 267 கோடி மட்டுமே. எனவே, மின்வாரியத்தின் வருவாய் இழப்புக்கு கடந்த திமுக அரசே முக்கிய காரணம்.

÷மின்வாரியத்தின் மின் ஆதாரத்தில் 25 சதவீதம் விவசாய மின் இணைப்புகளுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, மானியங்களுக்கான தொகையை அரசு முழுமையாக அளித்திருந்தால், மின்வாரியத்தின் வருவாய் இழப்பு மிகவும் குறைவாக இருந்திருக்கும்.

÷விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கும் ஆந்திரத்தில், மானியத் தொகையாக ரூ. 3,665 கோடியை அம்மாநில அரசு மின் வாரியத்துக்கு அளிக்கிறது. இதேபோல பஞ்சாப் அரசு அம்மாநில மின் வாரியத்துக்கு ரூ. 2,565 கோடி மானியத் தொகை அளிக்கிறது. ஆனால் தமிழக அரசு முழு மானியத் தொகையை தொடர்ந்து வழங்கவில்லை.

வாரியத்துக்கு மீட்சி நிதி தேவை: கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிகரித்துவரும் மின் நுகர்வோருக்கு ஏற்ப மின் உற்பத்தி செய்வதற்குத் திட்டம் கொண்டு வரப்படவில்லை.

மேலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்பதற்காக வெளிச் சந்தையில் கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டதும், வருவாய் இழப்புக்கு முக்கியக் காரணமாகும்.

எனவே, இந்த இழப்புக்கு பொறுப்பேற்று மின்வாரியத்துக்கு மீட்சி நிதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலா

ளர் எஸ்.எஸ். சுப்பிரமணியன்.

ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மின் கட்டணத்தை 110 சதவீத அளவுக்கு உயர்த்துவதற்கு பதிலாக, வருவாய் இழப்பைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது மொத்த மின் உற்பத்தியில் தனியாரின் பங்களிப்பு 11 சதவீதம் மட்டுமே. ஆனால், இந்தத் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்காக, மொத்த வருவாயில் 30 சதவீதத்தை மின்வாரியம் செலவிடுகிறது. எனவே, இந்தத் தனியார் நிறுவனங்களுடன் செய்துள்ள ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.

அரசுத் துறைகள் வைத்துள்ள மின் கட்டண பாக்கியை வசூலிக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், கூடுதல் சுமையை நுகர்வோர் மீது ஏற்றுவதைத் தவிர்க்கலாம் என்கின்றனர் மின் நுகர்வோர் நல ஆர்வலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.