சென்னை, மே 12: மேட்டூர் அனல் மின் நிலைய தீ விபத்தால் ஏற்பட்ட பொருள் சேதத்தின் மதிப்பு ரூ. 6 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
அடுத்த 20 நாள்களில் மின் உற்பத்தியை தொடங்கும் வகையில் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க 50 முதல் 60 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கு அதிக எரியும் திறன் கொண்ட வெளிநாட்டு நிலக்கரிதான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் உதவியாளரான நல்லதம்பி உயிரிழந்தார். மின் நிலையத்தில் உள்ள 4 யூனிட்களுக்கு நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் தீயில் கருகி சாம்பலானது.
இதையடுத்து மின்வாரிய உயர் அதிகாரிகள், மேட்டூர் மின் நிலையத்தில் வெள்ளிகிழமை ஆய்வு செய்தனர். இதில், தீ விபத்துக்கு அதிக எரியும் திறன் கொண்ட நிலக்கரிதான் காரணம் என கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வில் பங்கேற்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:÷தீ விபத்துக்கு அதிக எரியும் திறன் கொண்ட வெளிநாட்டு நிலக்கரிதான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், தீ எங்கிருந்து தொடங்கியது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தீ விபத்தில் கன்வேயர் பெல்ட் மற்றும் அதனைத் தாங்கிச் செல்லும் இரும்புச் சட்டங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன; பிற பகுதிகள் பாதிக்கப்படவில்லை. இந்த விபத்தால் ஏற்பட்ட பொருள் சேதம் மட்டும் குறைந்தபட்சம் ரூ. 6 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ரூ. 10 கோடி மதிப்பில் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. எனவே, சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இப்பணியில் 50 முதல் 60 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த 20 நாள்களில் மின் உற்பத்தியை தொடங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
நிலைமையை சமாளிக்க நடவடிக்கை: தீ விபத்து ஏற்பட்டவுடன், அவசர கால மின் உற்பத்தி யூனிட்டுகளை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் பெரிய அளவில் மின் பற்றாக்குறை ஏற்படாத வகையில் மின்வாரியம் நிலைமையை சமாளித்து வருகிறது.
சென்னையில் பெரும்பாலான இடங்களில் வழக்கமாக செய்யப்படும் 2 மணி நேர மின்வெட்டு சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டது. அதேபோல, ஈரோடு, தாராபுரம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு செய்யப்படும் நேரம் குறைந்துள்ளது. மே மாதம் மூன்றாவது வாரத்திலிருந்து காற்றாலை மின் உற்பத்தி அதிக அளவில் இருக்கும் என்பதால், மின்வெட்டு செய்யப்படும் நேரம் மேலும் குறைந்துவிடும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

சொல்லப் போனால்... பெட்டிக்குள் உறங்கும் பூதம்!
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


