பொன்னேரி, செப். 3: சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள் அவ்வப்போது ஏற்படும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் குறைவதற்கு இக்காவல் நிலைய எல்லையை இரண்டாக பிரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
÷திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி (சப்-டிவிஷன்) காவல் துணை கண்காணிப்பாளரின்கீழ் பொன்னேரி, மீஞ்சூர், காட்டூர், திருப்பாலைவனம், சோழவரம் ஆகிய 5 காவல் நிலையங்கள் அமைந்துள்ளன. மேற்கண்ட 5 காவல் நிலைய எல்லைகள் சுமார் 80 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ளன.
÷சென்னை-கோல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சோழவரம் காவல் நிலையத்தின் எல்லை சென்னை மாநகர காவல் நிலைய எல்லை வரை நீண்டுள்ளது. சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. அத்துடன் சென்னை-கோல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கி.மீ. தூரம் வரை சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் நடைபெறும் சாலை விபத்துகளில் சிக்கி காயம் மற்றும் உயிரிழப்போரை சோழவரம் போலீஸôர்தான் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதே போன்று சென்னை - கோல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நல்லூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகிலும், காரனோடை பாலம் மற்றும் ஜனப்பசத்திரம் கூட்டுச்சாலை ஆகிய இடங்களில் அவ்வப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சோழவரம் போலீஸôர்தான் சீர்செய்ய வேண்டும்.
÷சென்னை மாநகர காவல் நிலைய எல்லை அருகில் அமைந்துள்ள காந்திநகர், எடப்பாளையம், அலமாதி ஆகிய கிராமங்கள் சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ளன. சோழவரம் காவல் நிலையம் மேற்கண்ட கிராமங்களில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. அதே சமயம் சென்னை மாநகர காவல் நிலையம் அமைந்துள்ள செங்குன்றம் காவல் நிலையத்திலிருந்து மேற்கண்ட கிராமங்கள் 5 கி.மீ. தூரத்தில்தான் அமைந்துள்ளன.
÷சென்னை புறநகரை ஒட்டியுள்ள மேற்கண்ட கிராமங்களில் அவ்வப்போது கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர்ந்து வருகிறது. அத்துடன் சென்னை நகரில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரின் புகலிடமாகவும் மேற்கண்ட கிராமங்கள் அமைந்துள்ளதாக போலீஸôர் தெரிவிக்கின்றனர். சோழவரம் காவல் நிலையத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள இப்பகுதிகளில் போலீஸôர் இரவு நேர ரோந்துப் பணிகளில் ஈடுபடுவதில்லை என புகார் கூறப்படுகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
÷அண்மையில் இப்பகுதியில் உள்ள எடப்பாளையத்தில் இரட்டை கொலை சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இப்பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்றுவரும் குற்ற சம்பவங்களைத் தடுக்க எடப்பாளையம், அலமாதி, நல்லூர், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளை சோழவரம் காவல் நிலைய எல்லையில் இருந்து பிரித்து செங்குன்றம் காவல் நிலைய எல்லைக்குள் இணைக்க வேண்டும். அல்லது சென்னை மாநகர காவல் நிலைய எல்லைகுட்பட்ட பாடியநல்லூர் பகுதியில் புதிதாக சென்னை மாநகர காவல் நிலையத்தை அமைக்க காவல்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மேற்கண்ட பகுதிகளில் அதிகரித்துவரும் குற்ற சம்பவங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையம்: தாயைப் பிரிந்து சுற்றித்திரியும் குட்டியானை ஆற்றில் உற்சாக குளியல்!

எப்பவும் தனி வழிதான்: தனுஷ்

வாக்களித்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

பாஜகவுக்கு தாவிய ஹர்பஜன் சிங்! வீட்டுச் சுவரில் துரோகி வாசகம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


