தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் புதிதாக பட்டப் படிப்புகள் தொடங்கப்படும் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரகாந்தா கூறினார்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) நடைபெறுகிறது. இந்த பட்டமளிப்பு தொடர்பாகவும், பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய படிப்புகள் தொடர்பாகவும் அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
மொழியியல், மொழிபெயர்ப்பு படிப்புகள், மேலாண்மை தொடர்பான போலீஸ் நிர்வாகம், ஃபேஷன் டிசைன் மற்றும் பெண்கள் படிப்பு ஆகியவற்றில் முதுநிலைப் படிப்புகள் புதிதாகத் தொடங்கப்படும்.
அக்குபஞ்சர் தொடர்பாக இளநிலைப் பட்டப்படிப்பும், ஆங்கிலத்தில் எழுதுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி ஆகியவற்றில் முதுநிலை பட்டயப் படிப்பும், கனரக வாகனங்கள் பராமரிப்பில் டிப்ளமோ படிப்பும் புதிதாக வழங்கப்படும்.
48,120 மாணவர்களுக்குப் பட்டம்: திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. ஆளுநர் கே.ரோசய்யா தலைமையில் நடைபெறும் இந்தப் பட்டமளிப்பு விழாவில் 48,120 மாணவர்கள் பட்டம் பெற உள்ளனர்.
35,432 இளநிலை பட்ட மாணவர்களும், பட்டமேற்படிப்பில் 6,176 மாணவர்களும், பட்ட மேற்படிப்பு டிப்ளமோவில் 198 மாணவர்களும், டிப்ளமோ படிப்பில் 5,937 மாணவர்களும், எம்.பில். பட்டத்தில் 377 மாணவர்களும் பட்டம் பெற உள்ளனர் என்றார் சந்திரகாந்தா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்!

மூவர் அரைசதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 3-வது வெற்றி!

ஜன நாயகன் விவகாரம்: தணிக்கை வாரியம் விளக்கம்!

லால்குடி அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ. 6,000 கோடி: உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


