ஜெய்ப்பூர் மற்றும் சண்டீகர் ஆகிய இடங்களில் வழக்குரைஞர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை (மார்ச் 11) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அகில இந்திய பார் கவுன்சில் விடுத்திருந்த நாடு தழுவிய நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்ட அழைப்பை ஏற்று சென்னையிலும் வழக்குரைஞர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
வழக்குரைஞர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டிக்கும் வகையில் நீதிமன்ற விசாரணைகளைப் புறக்கணித்த சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் காவல் துறையினரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்
தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி. செல்வம், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினரும், தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவருமான எஸ். பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஜி. மோகனகிருஷ்ணன், அதன் நிர்வாகிகள் ஆர். முரளி, எஸ். அறிவழகன், சுதா, அந்த சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆர்.சி. பால் கனகராஜ், பெண் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் டி. பிரசன்னா உள்ளிட்ட ஏராளமான வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும்... இதே பிரச்னையை முன்வைத்து நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர். தலைநகர் தில்லி உயர் நீதிமன்றத்திலும் இப்போராட்டம் எதிரொலித்தது. இதனால் 2ஜி அலைக்கற்றை வழக்கு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் வழக்கு, தில்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு ஆகியவற்றின் விசாரணை பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முன்னோடித் திட்டங்களில் திமுகதான் ‘ஓஜி!' - முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்

ஹிமாசலில் சந்தேகத்திற்குரிய 'பாகிஸ்தான் பலூன்' கண்டெடுப்பு!

யூத் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சினிமாவைக் காப்பாற்ற ஒரே வழி... ரசிகர்களுக்கு மமிதா பைஜு வேண்டுகோள்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


