தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

பட்டா வழங்க காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கோரிக்கை

அரசு நிலங்களில் குடியிருப்போருக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான காலக்கெடுவை மேலும்

Updated On :2 ஏப்ரல் 2013, 5:05 am IST

அரசு நிலங்களில் குடியிருப்போருக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான காலக்கெடுவை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் கொறடா கே. பாலகிருஷ்ணன் முதல்வர் ஜெயலலிதாவிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அரசு நிலங்களில் வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்துக்கான காலக்கெடுவை 30-9-2012 முதல் 6 மாதங்களுக்கு நீட்டித்து 27-3-2013-ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மூன்று நாள்களில் அதாவது 31-3-2013-க்குள் இந்த 6 மாத காலக்கெடு முடிந்துவிட்டது. இதனால் பல லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு பலன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பட்டா வழங்குவதற்கான காலக்கெடுவை 31-3-2013 முதல் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் பட்டா வழங்கி முடிக்கும்வரை இதற்கு நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.