பொட்டு சுரேஷ் கொலை தொடர்பாக, மேலும் ஒருவர் மதுரை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தார்.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு என்ற பொட்டுசுரேஷ், மதுரையில் கடந்த ஜனவரி 31-ல் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக கீரைத்துறையைச் சேர்ந்த சபாரத்தினம், சந்தானம், விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு உள்ளிட்ட 9 பேர் வெவ்வேறு நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளனர்.
இதன்பிறகு, இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வில்வத்துரை என்பவர் சரண் அடைந்தார்.
இந்த வழக்கில் முக்கிய எதிரியாகக் கருதப்படும் அட்டாக்பாண்டி என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை கீரைத்துரையைச் சேர்ந்த பி. திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன் (28) மதுரை 4 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தார்.
அவரை 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ராஜலிங்கம் உத்தரவிட்டார். பின்னர் அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது

பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


