மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே காடனேரி விலக்கில் திங்கள்கிழமை காலையில் டேங்கர் லாரி மோதியதில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின.
டி.கல்லுப்பட்டி அருகே முத்தப்பன்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி, சங்கரப்பன், வாழைச்சின்னு மற்றும் நாகப்பன் ஆகியோர் மேய்ச்சலுக்கு ஆடுகளை வாங்கி வளர்த்து வந்தனர். திங்கள்கிழமை காலை பால்சாமி என்பவர் ஆடுகளை நத்தம்பட்டி நோக்கி ஓட்டிச் சென்றாராம்.
ராஜபாளையம் சாலையில் காடனேரி விலக்கு அருகே சென்றபோது, பரமத்தி வேலூரில் இருந்து ராஜபாளையத்துக்கு பாமாயில் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி, ஆடுகள் கூட்டத்துக்குள் எதிர்பாராதவிதமாக புகுந்தது.
இதில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள், சம்பவ இடத்திலேயே பலியாகின. 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்தன. இச்சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டி.கல்லுப்பட்டி போலீஸார் லாரி ஓட்டுநர் பரமத்திவேலூர் அருகே உள்ள உப்புப்பட்டியைச் சேர்ந்த ராஜா (47) என்பவரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



