தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை வேறு பகுதிகளில் திறக்கக் கூடாது: ராமதாஸ்

தமிழக நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை வேறு பகுதிகளிலோ அல்லது குடியிருப்பு பகுதிகளிலோ மீண்டும்

News image
Updated On :2 ஏப்ரல் 2013, 4:05 am IST

தமிழக நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை வேறு பகுதிகளிலோ அல்லது குடியிருப்பு பகுதிகளிலோ மீண்டும் திறக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகளினால் தான் விபத்துகள் நேர்கின்றன என்று காரணம் காட்டி, அவற்றை மூடும்படி ஆணையிடக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மார்ச் 31-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504 மதுக்கடைகளும், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த சில மதுக்கடைகள் மட்டுமே மூடப்பட்டிருக்கின்றன. மற்ற மதுக்கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகும்.

மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இதுதொடர்பாக தங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூறியுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பை மதித்து மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும்.  தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து அகற்றப்பட்ட மதுக்கடைகளை அந்தந்த பகுதிகளில் அமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது. இதுவும் தார்மீக அடிப்படையில் தவறாகும். சாலைகளில் மூடப்பட்ட கடைகள் மூடப்பட்டதாகவே இருக்க வேண்டும். அவற்றை வேறு இடங்களில் அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.