புதுதில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் முதுநிலைப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை மே 12ஆம் தேதி நடத்துகிறது. தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அதே நாளில் நேரடி பணி நியமனத்துக்கான தேர்வையும் நடத்துகிறது.
ஒரே நாளில் இரு தேர்வுகள் நடைபெறுவதால், பணியா?, உயர்படிப்பா என்று முடிவெடுக்க முடியாமல் எம்.பி.பி.எஸ். பட்டதாரிகள் தடுமாற்றத்துடன் உள்ளனர்.
6 ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ். ஆகியவற்றில் சேருவதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 6ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய அனைத்திந்திய மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் காலஅவகாசம் அளித்திருந்தது. இதற்கான நுழைவு தேர்வு மே 12ஆம் தேதி என ஏற்கெனவே அப்பல்கலைக் கழகம் தேதி குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், 911 காலி பணியிடங்களுக்கு எம்.பி.,பி.எஸ். படித்த உதவி மருத்துவர் (பொது), 1,163 இடங்களுக்கு சிறப்பு உதவி மருத்துவர் பணியிடங்களை தாற்காலிகமாக நிரப்புவதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் ஏப்ரல் 21 வரை விண்ணப்பிக்கக் கோரியுள்ளது. இதற்கான தேர்வு மே 12ஆம் தேதி என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இரு தேர்வுகளும் ஒரே நாளில் வருவதால், எம்.பி.,பி.எஸ். படித்து முடித்துவிட்டு அரசு வேலைவாய்ப்புக்கு காத்திருப்போர் வேலைக்கு செல்வதற்கான தேர்வை எழுதுவதா
அல்லது உயர்படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வை எழுதுவதா எனும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏதேனும் ஒரு வாய்ப்பை மட்டுமே தேர்வு செய்யும் இக்கட்டான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இரு தேர்வுகளுக்கும் விண்ணப்பத்து காத்திருக்கும் மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, வேலைவாய்ப்புத் தேர்வை எழுதலாம் என முடிவு செய்துவிட்டால், உயர்படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுத இன்னும் ஓராண்டு காத்திருக்கும் நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு ஓரிரு நாள்கள் தள்ளி இத்தேர்வை நடத்துவதன் மூலம் இரு தேர்வுகளையும் எம்.பி.பி.எஸ். படித்து முடித்தவர்கள் எழுத முடியும்
என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

