/

கருணாநிதி பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் ரத்ததானம்

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ரத்ததானம் செய்தார்.

News image
Updated On :1 ஜூன் 2013, 6:28 pm

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ரத்ததானம் செய்தார்.

கருணாநிதி தனது 90-ஆவது பிறந்த நாளை திங்கள்கிழமை (ஜூன் 3) கொண்டாடுகிறார்.

அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் சனிக்கிழமையில் இருந்தே சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தென்சென்னை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சனிக்கிழமை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்ததுடன் அவரும் ரத்ததானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 100 மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறும்போது, கருணாநிதியின் பிறந்தநாள் 3 மாதங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். ரத்ததானம், கண் தானம், அன்னதானம் உள்பட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று கூறினார்.

தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

குறுஞ்செய்தி மூலம் வாழ்த்து: கருணாநிதிக்கு குறுஞ்செய்தி மூலம் வாழ்த்து தெரிவிக்கும் வசதியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, கருணாநிதிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

கைப்பேசியில் க்ம்ந் ள்ல்ஹஸ்ரீங் அடித்து வாழ்த்துச் செய்தியைப் பதிவு செய்து, 56161 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.

அதைப்போல கருணாநிதியின் ஜ்ஜ்ஜ்.ந்ஹப்ஹண்ஞ்ய்ஹழ்ந்ஹழ்ன்ய்ஹய்ண்க்ட்ண்.ஸ்ரீர்ம் என்ற வலைதளத்திலும் வாழ்த்து தெரிவிக்கலாம் என்று திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்தரங்கில் கருணாநிதி: சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை (ஜூன் 2) மகளிரணி சார்பில் ஜனநாயகத்தில் கருணாநிதி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற குழு திமுக தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தேர்தல் பணிச் செயலாளர் கம்பம் பெ.செல்வேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

இதைப்போல மகளிரணி அணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சிகளை காலை 10.30 மணியில் இருந்து பகல் 2 மணி வரை சுமார் மூன்றரை மணி நேரம் வரை கருணாநிதி பார்த்தார்.

கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, எஸ்.பி.சற்குணபாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.