நெய்வேலி பழுப்பு நிலக்கரியை அண்டை மாநிலங்களுக்கும் விற்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, நெய்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மண்டல நிலக்கரி நுகர்வோர் குழுமக் கூட்டத்தில், என்.எல்.சி. தலைவர் பி.சுரேந்திரமோகன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அவர் பேசியது: இந்நிறுவனத்தில் வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி, நிறுவனத்தின் அனல்மின் நிலையங்களுக்கு பயன்படுத்தியது போக, அருகிலுள்ள மின் நிலையம் மற்றும் சிமெண்ட் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் பழுப்பு நிலக்கரியின் அளவை நடப்பு நிதியாண்டில் இருமடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால், அண்டை மாநிலங்களில் உள்ள தொழிலகங்களுக்கும் பழுப்பு நிலக்கரியை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் நாட்டின் அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்த என்எல்சி வழிவகுத்துள்ளது என்றார் சுரேந்திரமோகன். இக்கூட்டத்தில், மண்டல நிலக்கரி நுகர்வோர் குழும உறுப்பினர்கள் சி.டி.மெய்யப்பன், ஜெயப்பிரகாஷ், மப்பண்ண கஞ்சக்ரி, நிறுவன இயக்குநர்கள் ஆர்.கந்தசாமி, சரத்குமார் ஆச்சார்யா, ராகேஷ்குமார், எஸ்.ராஜகோபால் மற்றும் ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் போதைப் பொருள் இல்லா மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்: டி.டி.வி.தினகரன்
மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!

ராதாபுரத்தில் நாளை மத்திய அமைச்சா் ராஜ்நாத்சிங் பிரசாரம்

பவழ மல்லி பாடல்!
வீடியோக்கள்

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை


