நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

குற்றாலம் அருவிகளில் வெள்ளம்: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

குற்றாலம் அருவிகளில் புதன்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக புதன்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

News image
Updated On :11 ஜூலை 2013, 11:26 pm IST

குற்றாலம் அருவிகளில் புதன்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக புதன்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் புதன்கிழமை காலை முதல் மேகமூட்டத்துடன், அவ்வப்போது சாரல் மழையும் தொடர்ந்து பெய்து வந்தது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு புதன்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் புதன்கிழமை பகல் 1 மணியளவில் பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி நடைபாலம் வரையிலும் ஆக்ரோஷமாக தண்ணீர் கொட்டியது. பழைய குற்றாலத்தில் நடப்பாண்டு இரண்டாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிக்குச் செல்லும் நடைபாதை வழியாக தண்ணீர் பாய்ந்தோடியது.

இதனால் அங்கும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியிலும் தண்ணீர் அதிகளவில் கொட்டியதால் அங்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிற்றருவி மற்றும் புலியருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.