என்.எல்.சி.யில் அத்தியாவசிய சேவைப் பிரிவின்கீழ் பணிபுரியும் தொழிலாளர்களும் புதன்கிழமை ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் குடிநீர் விநியோகம், மருத்துவமனை செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் என்.எல்.சி. தொழிலாளர்கள், சில அத்தியாவசிய சேவைப் பிரிவின்கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஸ்டிரைக்கிலிருந்து விலக்கு அளித்திருந்தனர்.
இந்நிலையில் அந்தப் பிரிவின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களும் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் புதன்கிழமை என்.எல்.சி. மருத்துவமனையின் செயல்பாடு பெருமளவில் பாதிக்கப்பட்டது.
புறநோயாளிகள் பிரிவு, ரத்தப் பரிசோதனை நிலையம், எக்ஸ்ரே, ஸ்கேனிங், கட்டு கட்டுமிடம், உள்நோயாளிகள் சேர்க்கைக் கவுன்ட்டர் உள்ளிட்டப் பிரிவுகள் மூடப்பட்டிருந்தன.
அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் ஐசியு உள்ளிட்ட வார்டுகள் மட்டும் இயங்கின. மருத்துவர்கள் மற்றும் சில செவிலியர்கள் பணிக்கு வந்திருந்த போதிலும், துப்புரவுப் பணியாளர்கள், செவிலியர் உதவியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்டோர் பணிக்கு வரவில்லை. உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் பெரும்பாலானோர் செவ்வாய்க்கிழமை இரவே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் பெற்றுக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறிவிட்டதால் உள்நோயாளிகள் வார்டுகளில் படுக்கைகள் காலியாக இருந்தன. என்எல்சி மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட 640 ஊழியர்களும், நகர நிர்வாகத்தின்கீழ் உள்ள அத்தியாவசிய சேவைப் பிரிவின் கீழ் 750 ஊழியர்களும் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்.எல்.சி. மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் காலியாக உள்ள படுக்கைகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்







