சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் தந்தை பா.சின்னசாமி (97) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.
÷அவர், பண்ருட்டி வட்டம் மேல்குமாரமங்கலத்தில் வசித்து வந்தார். உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடல், பண்ருட்டி, மேல்குமாரமங்கலத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி அளவில் மேல்குமாரமங்கலம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
முதல்வர் இரங்கல்
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி. சம்பத்தின் தந்தை சின்னசாமி மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:உடல் நலக் குறைவால் உங்களது தந்தை சின்னசாமி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) அதிகாலை உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.
இந்தத் துயரச் சம்பவத்தால் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ள போதிலும், அதைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் வழங்க இறைவனைப் பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


